உங்கள் Android மற்றும் iPhone-ல் Delete செய்யப்பட்ட file-களை எப்படி பாதுகாப்பாக Recover செய்வது

10:37 PM |
உங்கள் Android போனில் இருக்கும் Photos, Videos, Audio அல்லது ஏதேனும் ஒரு File தவறுதலாக அளிக்கபட்டுவிட்டதா? இன்றைய பதிவில் Android போனில் இருந்து அழிக்கப்பட்ட கோப்புக்களை எப்படி மீண்டும் மீட்டு கொள்வது என்று பார்ப்போம்.

நமது அன்றாட வாழ்வில் முக்கியமான ஒரு பங்கை வகிக்கும் இந்த ஸ்மார்ட் போன்களிலேயே நாம், பல்வேறு தரவுகளை சேமித்து வைத்து இருக்கிறோம். இதில் அன்றாடம் நீங்கள் எடுத்து கொள்ளும் Selfie முதல் வங்கி கணக்கு Password வரை உள்ளடங்கும்.

இவ்வாறு தினம்தோறும் உங்களோடு பயணிக்கும் இந்த ஸ்மார்ட் போனிலிருந்து ஏதாவது முக்கியமான தகவல் ஒன்று தவறுதலாக அழிந்து விட்டால் அதை எவ்வாறு பாதுகாப்பாக மீட்டெடுப்பது என்று கூறுகிறேன்.

முதலாவதாக உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து ஏதேனும் ஒரு File தவறுதலாக அழிந்து விட்டால், உடனடியாக உங்கள் போனை பாவிப்பதை நிறுத்துங்கள். அதாவது, உங்கள் போனில் புதிய ஆடியோ வீடியோ அல்லது வேறு ஏதேனும் File-களை புதிதாக சேமிப்பதை நிறுத்துங்கள்.

ஏனெனில், உங்கள் போனில் இருந்து ஏதேனும் ஒரு File அழிந்து விட்டால், அது முழுமையாக இல்லாமலாகி விட்டது என்று அர்த்தமல்ல. குறிப்பிட்ட File, உங்கள் மெமரி கார்டு அல்லது போன் மெமரியில், அதே இடத்தில் மறைந்து காணப்படும்.

இதுவே Delete செய்யப்படும் File-களுக்கான நியதி. ஒரு File Delete செய்யப்பட்டவுடன், அது உடனடியாக, அழிக்கப்பட்டு விடாமல், குறிப்பிட்ட அதே இடத்தில் மறைந்து காணப்படுமாறே Program செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மறைந்து காணப்படும் File-களையே Data Recovery மென்பொருட்கள் இலகுவாக மீட்டெடுத்து தருகின்றது.

ஆனால் ஒரு File Delete செய்யப்பட்டவுடன் நீங்கள் இன்னொரு புதிய File-ஐ உங்கள் போனில் Save செய்யும் போது, புதிய File ஆனது, ஏற்கனவே Delete ஆகி இன்னும் உங்கள் போனில் மறைந்து காணப்படும் அந்த பழைய File-ஐ Replace செய்தே உங்கள் போனில் சேமிக்கப்படும்.

இவ்வாறு Delete செய்யப்பட்ட File Replace செய்யப்படும் போது, Data Recovery மென்பொருட்களுக்கு Delete செய்யப்பட்ட File-களை மீட்டெடுப்பது கடினமான காரியம் ஆகிறது. இதனாலேயே நான் உங்களை, ஒரு Delete செய்யப்பட்ட File-ஐ மீட்டெடுக்கவேண்டுமாயின், உடனடியாக உங்கள் போனில் புதிய File-களை சேமித்து கொள்வதை தவிர்க்க கூறினேன்.
இந்த விதியை பின்பற்றிய பின்னர், ஏதேனும் சிறந்த Data Recovery மென்பொருளை பயன்படுத்தி மிக இழகுவாக Delete செய்யப்பட்ட File-ஐ மீட்டெடுத்து கொள்ள முடியும்.

Delete செய்யப்பட்ட File-களை மறுபடியும் மீட்டெடுத்து கொள்ள சிறந்த மென்பொருளாக, கீழே குறிப்பிட்டுள்ள மென்பொருட்கள் காணப்படுகிறது.
Recuva Data Recovery Tool

Fonepaw Android Data Recovery

7 Data Android Recovery

இவற்றில் ஏதேனும் ஒரு Data Recovery மென்பொருளை Download செய்து உங்கள் கணனியில் Install செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய ஸ்மார்ட் போனை கணனியுடன் USB Cable மூலம் தொடர்புபடுத்தி, Install செய்த Data Recovery மென்பொருள் மூலம் Scan செய்யுங்கள்.

ஒரு சில நிமிடங்களில் Scan முடிவடைந்து, Data Recovery மென்பொருளால் மீட்டெடுக்க முடியுமான File-களை உங்களுக்கு பட்டியலிட்டு காட்டும். Scan முடிவடையும் நேரமானது நீங்கள் Scan செய்யும் Device-இன் அளவை பொறுத்தே உள்ளது.

Delete செய்யப்பட்ட File-களை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் Recuva Data Recovery மென்பொருளானது மிகப்பிரபல்யமான ஒன்றாகும். இதனால், உங்கள் Delete செய்யப்பட்ட File-களை மீட்டெடுத்துகொள்ள முதலாவதாக Recuva மென்பொருளை முயற்சித்து பாருங்கள்.
மேலும் வாசிக்க…

சிகரெட்டுடன் ஸ்மார்ட்போன்..!!

9:43 PM |
புகை பிடிக்கும் பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் உலகெங்கும் பரவலாக விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுமையாக எலக்ட்ரானிக் சிகரெட்டுடன் ஸ்மார்ட்போன் ஒன்று வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூபிடர் ஐ.ஓ.3 என்ற இந்த ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு கிட்கேட் இயங்குதளத்துடன் வெளிவருகிறது. ஹெட்போனை போல் இ-சிகரெட்டு கருவியை பொருத்துவதற்கு தனியாக ஜேக் உள்ளது. இரண்டு பேட்டரிகளை கொண்ட இந்த போனில் ஒரு பேட்டரி போனிற்காகவும், மற்றொரு பேட்டரி அதிலுள்ள இ-சிகரெட்டிற்காகவும் இடம் பெற்றுள்ளது.

காபி, புதினா, சாக்லேட் என பல வாசனைகளில் திரவ கேட்ரிஜ்களுடன் கூடிய எலக்ட்ரானிக் சிகரெட் குச்சி இந்த போனுடன் தரப்படுகிறது. வேண்டிய நேரத்தில் இதை பொருத்தி புகைபிடித்துக் கொள்ளலாம். ஒரு கேட்ரிஜைக் கொண்டு 800 முறை புகைப்பிடிக்க முடியும். இதற்கென தனியாக திரவ கேட்ரிஜ்ஜூகளும் உள்ளன.

புகை பிடிப்பதன் மீதுள்ள மோகத்தை குறைக்கும் வகையில் வேப் எனும் அப்ளிகேஷனும் தரப்பட்டுள்ளது. இந்த ஆப் எத்தனை முறை புகை பிடிக்கிறோம் என்பதை கணக்கிட்டு நமக்கு எச்சரிக்கை செய்கிறது. 3ஜி இண்டர்நெட் வசதியுடன் கூடிய போன் ரூ.20 ஆயிரத்திற்கும், 4ஜி வசதியுடன் கூடிய போன் ரூ.33 ஆயிரத்திற்கும் விற்பனைக்கு வருகிறது.

எனினும், வழக்கமான சிகரெட்டுகளுடன் ஒப்பிடுகையில் இது ஏதாவது கதிர்வீச்சு பாதிப்புகளை உண்டாக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனுக்கு அமெரிக்க மத்திய தகவல்தொடர்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

Android Smart Phone பேட்டரியை நீண்ட நேரத்திற்கு சேமிக்க உதவும் அப்ளிக்கேஷன்.!!

6:18 PM |
இருப்பினும் சில வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் அதன் பேட்டரியின் சக்தியை நீண்ட நேரத்திற்கு சேமித்துக்கொள்ள முடியும்.

அவ்வாறான வழிமுறைகளில் ஒன்றாக பேட்டரியின் சக்தியை சேமிக்கக்கூடிய செயலிகளை எமது ஸ்மார்ட் போனில் நிறுவி பயன்படுத்தலாம்.

இருப்பினும் பெரும்பாலானவர்களின் கருத்து "செயலிகளை நிறுவுவதன் மூலம் பேட்டரியின் சக்தியை சக்தியை சேமிக்க முடியாது மாறாக அவைகள் பேட்டரியின் சக்தியை மேலும் விரயமாக்குகின்றன" என்பதாகும்

எனினும் உண்மை அவ்வாறல்ல.....!

சில செயலிகளை பயன்படுத்தி நாம் எமது ஸ்மார்ட் போனின் சக்தியை சேமிக்க முயற்சிக்கும் போது அந்த செயலிகளால் பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாடு தற்காலிகமாக தடை செய்யப்படும். எனவே அவைகள் குறுகிய நேரத்திலேயே மீண்டும் துவங்க ஆரம்பித்து விடுகின்றன. ஆகவே உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி மீண்டும் காலியாக துவங்குகின்றது.


  • பின்புலம் - Background

என்றாலும் சில செயலிகளை பயன்படுத்தி ஸ்மார்ட் போனின் பேட்டரி சக்தியை சேமிக்க முயற்சிக்கும் போது அவைகள் பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாட்டை முற்றிலுமாக தடை (Force Stop) செய்து விடுகிறது. எனவே அவைகள் இணையத்துடன் தானாக தொடர்புபடவோ பின்புலத்தில் இயங்கவோ செய்யாது எனவே உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரியை நீண்ட நேரத்திற்கு சேமித்துக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு சட்ஆப் செயலி

அந்த வகையில் பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய உதவுகின்றது "சட்ஆப்" எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி.


சட்ஆப் செயலியை பயன்படுத்துவது எப்படி?


இதனை பயன்படுத்துவது மிகவும் இலகு கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட் போனுக்கு நிறுவிக்கொள்ளுங்கள்.



இனி இந்த செயலி உங்கள் ஸ்மார்ட் போனில் செயற்பட உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் Service எனும் வசதியை இந்த செயலிக்கு செயற்படுத்துதல் வேண்டும். இதனை குறிப்பிட்ட செயலியின் அறிவுறுத்தலின் படி Setting பகுதிக்கு சென்று Accessibility ===> Service என்பதில் தரப்பட்டிருக்கும் ShutApp என்பதை சுட்டுவதன் மூலம் செயற்படுத்திக் கொள்ளலாம்.




பின் இந்த செயலியில் தோன்றும் Shut என்பதை அழுத்த உங்கள் ஸ்மார்ட் போனின் பின்புலத்தில் இயங்கும் அனைத்து செயலிகளும் மீள துவங்க முடியாதவாறு முற்றிலுமாக தடை செய்யப்படும்.



இனி உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி நீண்ட நேரத்திற்கு நிலைத்திருப்பதை உணர்வீர்கள்.

நன்றி - Tamilinfotech.Com

குறிப்பு: 

இவ்வாறு நீங்கள் தடைசெய்யும் செயலிகளில் இருந்து நோட்டிபிகேஷன் எதுவும் தோன்ற மாட்டாது.

இருப்பினும் வைபர், வாட்ஸ்ஆப் மற்றும் ஏனைய செயலிகளில் இருந்து பெறப்படும் தகவல்களை வழமைபோல் நோட்டிபிகேஷன் ஆக  பெற வேண்டும் எனின் குறிப்பிட்ட செயலிகளை மாத்திரம் சட்ஆப் செயலியின் Whitelist என்பதில் இணைத்துக் கொள்ளலாம்.

இதற்கு சட்ஆப் செயலியின் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Whitelist என்பதை அழுத்துவதன் மூலம் மேற்குறிப்பிட்டது போன்று முற்றாக தடைசெய்யப்படாமல் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டிய செயலிகளை உள்ளிட்டுக் கொள்ளலாம்.


மேலும் இந்த செயலியில் இருக்கும் Magic Ball என்பதை செயற்படுத்துவதன் மூலம் ஒரு சிறிய வட்ட அடையாளத்தில் பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உங்கள் ஸ்மார்ட் போனில் காண்பிக்கப்படும். பின் இதன் எணிக்கை அதிகரிக்கும் போது உடனடியாக தேவையற்ற செயலிகளின் செயற்பாட்டை தடை செய்துகொள்ள முடியும்.

இவைகள் தவிர உங்கள் பாக்கெட்டில் ஸ்மார்ட் போனை இட்டவுடன் தேவையற்ற செயலிகள் தானாக தடைசெய்யப்படும் வகையிலான வசதியும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது. எனினும் இந்த வசதியை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனில் சட்ஆப் செயலியில் தரப்பட்டுள்ள Invite என்பதன் மூலம் இந்த செயலியை மூன்று நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் அல்லது கட்டணம் செலுத்தி இதன் முழுமையான பதிப்பை பெற வேண்டும்.

இதனை தரவிறக்க இங்கே சுட்டுக
மேலும் வாசிக்க…
2015 Thediko.com