2 நாளில் ‘தல’ பிறந்தநாள் ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

9:57 PM |
தமிழ் சினிமாவின் வசூல் நாயகன் அஜித். 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமாகி சிறந்த புதுமுகத்திற்கான விருதை பெற்றார். அதை தொடர்ந்து அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதை தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். எனினும் அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் ஆசை திரைப்படமாகும். அதை தொடர்ந்து காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம் என பல வெற்றி படங்களை கொடுத்தார் அஜித்.

பிறகு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து 2001 ஆம் ஆண்டு 14 ஆம் தேதி தீனா திரைப்படம் வெளியானது. இதில் சுரேஷ் கோபி, லைலா போன்றோர் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து அஜித்குமார் ‘தல’ என அழைக்க தொடங்கினர்.

அஜித்குமார், ‘தல’ அவதாரம் எடுத்து வரும் 14 தேதியுடன் 16 ஆண்டுகள் ஆகிறது. அதை தல ரசிகர்கள் தல பொங்கலாக கொண்டாட காத்துகொண்டிருக்கின்றனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com