வேதாளம் - கணேஷா...?? இணையத்தை சுற்றும் வேதாளம் படத்தின் கதை

1:23 AM |
வேதாளம் படத்தின் கதை இதுதான் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகின்றது.

வேதாளம் தல ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம்.

இத்தனை நாட்கள் டான் படம், பேய் படம் என பல கதைகள் சுற்றி வந்தது. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வந்த கதை இது தான்.’படத்தில் வேதாளம், கணேஷ் என இரண்டு அஜித்.

இவர்களின் தங்கை தான் லட்சுமி மேனன். உள்ளூர் ரவுடியாக இருக்கும் வேதாளம் ஒரு சில பெரிய பிரச்சனைகளில் தலையிடுகிறார்.இதனால், வில்லன் கும்பல் வேதாளத்தை கொன்று விடுகின்றனர்.

இதை தொடர்ந்து கணேஷ் அஜித்தும், லட்சுமி மேனனும் கொல்கத்தாவிற்கு சென்று விட, யதார்த்தமாக அந்த வில்லன் கும்பல் அஜித் கண்ணீல் பட, பிறகு எப்படி அந்த வில்லன் கும்பலை தெறிக்க விடுகிறார் என்பதே கதை’ என ஒரு கதை உலா வருகின்றது.
மேலும் வாசிக்க…

வேதாளம் படத்தின் கதை இதுவா..??

2:39 AM |
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வேதாளம்’. இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், தம்பிராமையா, அஸ்வின் கக்குமனு, அப்புக்குட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் ‘பாட்ஷா’ படத்தை போன்று கேங்ஸ்டர் மற்றும் ஒரு ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

இப்படம் குறித்த சில விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் அஜித், கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். லட்சுமி மேனன் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தம்பிராமையா இவர்களுக்கு அப்பாவாகவும், அப்புக்குட்டி அஜித்துக்கு நண்பராகவும் நடித்துள்ளார்களாம்.

ஆரம்பத்தில் கணேஷாக வரும் அஜித், பிளாஸ்பேக் காட்சிகளில் டானாக வருகிறாராம். கணேஷ் கதாபாத்திரம் முழுவதும் கொல்கத்தாவில் படமாக்கியுள்ளனர். டான் கதாபாத்திரத்தை சென்னையில் படமாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதேவேளையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளுமா டோலுமா’ என்ற பாடலின் டீசர் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த டீசரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை நாளை வெளியிடவுள்ளனர். தொடர்ந்து தீபாவளிக்கு படம் வெளியாகிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com