தெறி ரிலீஸ் ஆகும் அதே தேதியில் இந்த பிரமாண்டமான படம் ரிலீஸா????

12:27 AM |
இந்தியாவின் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகவும், தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த படமாகவும் பெருமை பெற்ற எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி'க்கு விசுவாசமாக இருந்த கட்டப்பா, திடீரென பாகுபலியை கொலை செய்வதுடன் முதல்பாகம் முடிவடைந்திருக்கும். இந்த மர்மத்திற்கான விடையை தெரிந்து கொள்ள ஒரு வருடத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ல் விஜய்யின் 'தெறி' ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சரியாக ஒரு வருடம் கழித்து அதே ஏப்ரல் 14-ல் 'பாகுபலி 2' ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க…

ஹிந்தி இயக்குனரை திருமணம் செய்யும் தமன்னா..!!

10:46 PM |
நடிகை தமன்னாவையும், இந்தி டைரக்டர் சாஜித் கானையும் இணைத்து கிசுகிசுக்கள் பரவி உள்ளன. சாஜித்கான் இந்தியில் ம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற இரண்டு படங்களை தமன்னாவை கதாநாயகியாக நடிக்க வைத்து இயக்கினார்.

படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேசப்படுகிறது. இதற்கு தமன்னா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
டைரக்டர் சாஜித்கானும் நானும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவுகிறது. அவர் இயக்கிய ம்மத்வாலா படத்தில் நான் நடித்தேன்.

அந்த படம் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்தது. அதன்பிறகும் என்னை ஒதுக்காமல் இரண்டாவது படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். இது அவர் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது. இருவரும் நட்பாக பழகினோம்.
படப்பிடிப்பில் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். இதை வைத்துத்தான் இப்படி தவறான தகவல் பரவி இருக்கிறது. எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. வதந்திகளும் கிசுகிசுக்களும் மக்களை விரைவில் சென்று அடைந்து விடுகிறது. அப்படித்தான் இந்த காதல் வதந்தியும் பரவி இருக்கிறது. இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை விரும்புகிறேன். பாகுபலி என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படம். அந்த படத்தில் வாய்ப்பு தந்த டைரக்டர் ராஜமவுலி எனக்கு கடவுளாக தெரிகிறார். இந்தியில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து அங்கேயும் சிறந்த நடிகை என்ற பெயர் வாங்க ஆசை இருக்கிறது.

எப்படித்தான் கஷ்டப்பட்டு நடித்தாலும் அதிர்ஷ்டம் வேண்டும். நல்ல கதை, நேரம், ரசிகர்கள் ஆதரவு, அதிர்ஷ்டம் எல்லாம் சேர்ந்து இருந்தால் ஜெயிக்கலாம். எனக்கு சினிமாவில் எந்த பின்புலமும் இல்லை. ஆனாலும் அதிர்ஷ்டம் இருந்ததால் உயர்ந்தேன். இவ்வாறு தமன்னா கூறினார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com