பிரதியுஷாவின் மரணத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நடிகர் ராகுல், பெண்ணொருவர் மீது வல்லுறவு

2:19 AM |
மும்பையை சேர்ந்த டி.வி. நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவரது காதலனும், நடிகருமான ராகுல் சிங்குக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவர் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்று வெளியில் இருக்கிறார்.

இந்தநிலையில், ஓஷிவாராவில் உள்ள ஒரு உணவகத்தில் 21 வயது நடிகை ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக நடிகர் ராகுல்சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ராகுல் சிங் மீது புகார் கொடுத்துள்ள நடிகை சம்பவத்தன்று தனது ஆண் நண்பர் உடன் உணவகத்திற்கு சென்றிருக்கிறார்.

அப்போது ராகுல் சிங் தனது தோழி ஒருவருடன் அங்கு இருந்தார்.ராகுல் சிங்கிற்கும், மானபங்கம் செய்யப்பட்ட நடிகையின் ஆண் நண்பருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து உள்ளது. உணவகத்தில் அந்த நபரை பார்த்ததும் ராகுல்சிங் அவரிடம் சென்று போதையில் தகராறு செய்து இருக்கிறார். இதை தட்டிக்கேட்ட போது அவர், நடிகையை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக அம்போலி பொலிஸார் ராகுல் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

தற்கொலை செய்து கொண்ட நடிகை கர்ப்பம் - அதிர்ச்சி தகவல் அம்பலம்..!!

12:17 AM |
மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா கடந்த 1-ந் திகதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும், அவரது காதலன் ராகுல் சிங்கும் தனிமையில் வசித்து வந்த நிலையில், திடீரென அவர் இந்த முடிவை தேடிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், ராகுல்சிங் கொடுத்த சித்ரவதை காரணமாக தான் பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் போலீசில் புகார் கொடுத்தார். இதனிடையே, இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, ராகுல் சிங் முன்ஜாமீன் பெற்றார். அவரது முன்ஜாமீன் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தற்கொலை செய்து கொண்ட 24 வயது டி.வி. நடிகை பிரதியுஷா, கர்ப்பமாக இருந்த தகவல் வெளியாகி பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருப்பையில் மேற்கொண்ட சோதனையில் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் பிரதியுஷா தன்னுடைய வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்திருக்கிறார். இந்த தகவலை ஜே.ஜே. மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, பிரதியுஷா தற்கொலை வழக்கில் மறைந்து கிடக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் முன்னர், அவர் கர்ப்பமாக இருந்த தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com