ரஜினிக்கு ஜோடி எமி ஆச்சரியங்கள் மிகுந்த எந்திரன் 2 தகவல்கள்..!!

6:57 AM |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, நடிக்கவுள்ள எந்திரன்-2 படத்தின் பட்ஜெட் 250 கோடியைத் தாண்டும் என கூறப்படுகிறது. தற்போது நடித்து வரும் கபாலி படத்தை முடித்த பிறகு ரஜினி எந்திரன் 2 படத்தில் இணைய உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத் துவக்கத்தில் ஆரம்பமாகவுள்ளது. மேலும் கதாநாயகியாக பாலிவுட்டின் நடிகைகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது ஷங்கரின் ஐ படத்தில் நடித்த எமிஜாக்சனை ரஜினிக்கு ஜோடியாக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வில்லனாக நடிக்க அர்னால்டு உள்ளிட்ட பல ஹாலிவுட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றனர். இது தவிர்த்து படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநராக டி.முத்துராஜ், கிராஃபிக்ஸ் காட்சிகள் ஸ்ரீனிவாஸ் மோகன், எடிட்டிங் ஆண்டனி என இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய தகவலாக படத்தின் பெரும்பாலான பகுதி 3டி மோஷன் கேப்சரில் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது.

மேலும் மோஷன் கேப்சர் முதல் பாகமான எந்திரனில் இரண்டாம் பாதி சண்டைக் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

எந்திரன்- 2 படத்தை லைகா இண்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com