ரகசிய கேமரா பயம்..சொந்த வீடு தேடும் ப்ரியங்கா! அமெரிக்காவில்..!!

11:35 PM |
ஹோட்டல்களில் தங்கும்போது ரகசிய கேமரா ஆபத்து நிறைய இருப்பதால், அமெரிக்காவில் சொந்த வீடு தேடுகிறேன் என்கிறார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

இப்போதெல்லாம் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளப் பக்கங்கள் மற்றும் குழுக்களில் அதிகம் உலா வருவது நடிகைகளின் அந்தரங்க படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள்தான். பெரும்பாலும் ஹோட்டல்களில் குளியல் அறைகளில் அவர்கள் குளிப்பதை ரகசிய கேமிராக்கள் மூலம் படம் பிடித்து இணையத்தில் ஏற்றி விடுகிறார்கள்.

படுக்கை அறையில் இருக்கும் படங்கள், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் தப்புவதில்லை.இதற்காக போலீசில் புகார் செய்யப் பயந்து, அந்தப் படத்திலிருப்பது நானல்ல என்று கூறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறார்கள் நடிகைகள்.

"நான் ஹோட்டல்களில் தங்க பயப்படுவதே இந்தப் பிரச்சினைக்காகத்தான்" என்கிறார் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா.

இப்போது அவர் அடிக்கடி அமெரிக்கா போய் வருகிறார். டிவி ஷோ, ஹாலிவுட் படங்களில் நடிப்பது போன்ற காரணங்களுக்காக அங்கேயே ஹோட்டல்களில் தங்குகிறார். இந்தியாவைப் போல அமெரிக்க ஹோட்டல்கள் பாதுகாப்பற்றவை அல்ல. தனிமனித சுதந்திரத்தில் மிகுந்த அக்கறை கொண்ட நாடு அது. ஆனாலும் ப்ரியங்காவுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லையாம்.

அவர் கூறுகையில், "நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை நான் அசவுகரியமாக நினைக்கிறேன். ரகசிய கேமராக்கள் பொருத்தி வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இதனால் ஓட்டல்களில் நான் தங்குவது இல்லை. வெளிநாடுகளுக்கு போகும்போதும் ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கிறேன். தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காகவும் அடிக்கடி அமெரிக்கா செல்ல வேண்டி இருக்கிறது. அங்கு ரகசிய கேமரா பயத்தினால் ஓட்டல்களில் தங்குவது இல்லை. இதனால் அமெரிக்காவில் சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்துள்ளேன். இதற்காக நல்ல வீடு தேடி வருகிறேன்,'' என்றார்.
மேலும் வாசிக்க…

லாட்ஜ் அறையில் வைக்கப்படும் ரகசிய கேமரா பெண்களே உஷார்..!!

10:24 PM |
மேலும் வாசிக்க…

ரகசிய கேமராவை எப்படி தெரிந்து கொள்வது..??

12:24 AM |
பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்  போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப் புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ள இரகசிய  கேமராவை தெரிந்து கொள்வது எப்படி?

முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, சன்னல்களை அடைத்து விட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை  ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம்  எடுக்கும் போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்து  விட்டு அறையிலுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்
படம் எடுங்கள்.

இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப் பட்டிருப்பின் அது இருட்டுப் புகைப்படத்தில் சிகப்பு நிற  புள்ளிகளாகத் தெரியும்.

இதை வைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள்  பொருந்தியுள்ளதை அறியலாம்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள Share பட்டன் மூலம் Whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com