தனது மேனேஜர் மூலம் 7 ஆண்டு கால காதலை முறித்துள்ளார் வரலட்சுமி..!!

11:22 PM |
நடிகர் விஷாலும், சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் காதலர்கள் என்பதும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதும் கோடம்பாக்கம் அறிந்த விஷயம். இருப்பினும் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு பிரச்சினை வெடித்தது. அப்போது விஷாலுக்கு ஆதரவாக வரலட்சுமி இருந்தார்.

ஆனால் சமீபத்தில் சரத்குமாருக்கு ஆதரவாக வரலட்சுமி மாறியதாகவும், விஷாலுடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டதாகவும் செய்தி பரவியது.

இந்நிலையில் வரலட்சுமி தனது ட்விட்டர் பதிவில் ’’காதல் முறிவுகள் தரம் தாழ்ந்துள்ளன..ஒரு ஆண் தனது மேனேஜர் மூலம் 7 ஆண்டு கால காதலை முறித்துள்ளார்…காதல் எங்கே? என பதிவிட்டுள்ளார். இதனால் விஷாலுடன் அவருக்குள்ள 7 ஆண்டு காதலில் பிரச்சினை என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வருகிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com