மாதவனின் இறுதிச்சுற்று டிரைலரை வெளியிடும் சிவகார்த்திகேயன்..!!

1:13 AM |
மாதவன் நடிப்பில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இறுதிச்சுற்று’. நீண்டகால தயாரிப்பில் இருக்கும் இப்படத்தில் மாதவன் ஒரு பாக்ஸராக நடித்திருக்கிறார். இப்படம் இந்தியில் ‘சாலா காதூஸ்’ என்ற பெயரில் வெளிவருகிறது.

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கே.பிரசாத் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்படத்தின் இந்தி டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ் டிரைலரை நாளை வெளியிடவுள்ளனர். இந்த டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார். பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரைலரை தொடர்ந்து, இப்படத்தை ஜனவரியில் இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com