புலி படம் மெய்சிலிர்க்க வைக்கிறது : தமன்னா பாராட்டு

8:11 AM |
விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தை பற்றி நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், இப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து வருகின்றனர்.

அதேபோல், ‘புலி’ படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் விஜய்-யின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகை தமன்னா, ‘புலி’ படம் மெய்சிலிர்க்க வைப்பதாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘புலி’ படத்தை பார்த்தேன் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. படத்தில் வரும் பிரம்மாண்ட காட்சிகளை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது. இப்படி ஒரு படைப்பை கொடுத்த விஜய்க்கும் மற்றும் ‘புலி’ படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள் என்று தமன்னா கூறினார்.
மேலும் வாசிக்க…

புலி படம் குறித்து சென்ஸாரில் கூறப்பட்டது என்ன?

1:57 AM |
புலி படம் நேற்று சென்ஸார் சென்று ‘யு’ சான்றிதழ் பெற்றது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்தை பார்வையிட்ட சென்ஸார் அதிகாரிகள் படக்குழுவினர்களை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும், படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிக தத்ரூபமாக வந்துள்ளதாகவும், இப்படம் குழந்தைகளுக்கு செம்ம விருந்து எனவும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யு சான்றிதழ் கிடைத்ததால், ரசிகர்கள் டுவிட்டரில் அதிரி புதிரி செய்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com