தெறிக்கு போட்டியாக யாரும் எதிர்பாராத நிலையில் பிரபல நடிகர் நாளை படத்தை ரிலீஸ் செய்கிறார்!!அதிர்ந்த படக்குழு..!!

2:02 AM |
விஜய் நடித்துள்ள தெறி படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. எனவே, இப்படம் ரிலீஸ் ஆகும் நாளில், வேறு எந்த படங்களும் வெளியாகாது என கூறப்படுகிறது.

தமிழகம் போலவே கேரளாவிலும் இதே நிலைமை. ஓணம் பண்டிகைக்கு அடுத்து, மலையாளிகள் பெரியளவில் கொண்டாடும் விஷு (ஏப்ரல் 14) அன்று கூட எந்த படங்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில், விஜய்யுடன் மோத யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ள வை என்று பெயரிடப்பட்ட படம் வெளியாகிறது.

இப்படத்தில் அறிமுக கதாநாயகன் விஜய் R.நாகராஜ் மற்றும் பிரியா மேனன் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். டைட்டில் நாயகன் யோக்கியனாக சிங்கம் புலி நடித்துள்ளார்.

இவர்களுடன் தென்னவன், சுப்புராஜ், நெல்லை சிவா, ஹலோ கந்தசாமி, வெங்கல் ராவ், போண்டா மணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சுவாமி ராஜ் இயக்க இப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com