ஜனாதிபதி கையில் தேசிய விருதுகளை வாங்கிய நட்சத்திரங்கள்..!!

10:32 PM |
இந்திய சினிமாவின் உயரிய கௌரம் என்றால் அது தேசியவிருது தான். அந்த வகையில் 63வது தேசிய விருது வென்றவர்களின் விபரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கும், சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் வழங்கப்பட்டது.

சிறந்த இயக்குனர் விருது சஞ்சய் லீலா பன்சாலிக்கு பாஜிரா மஸ்தானி படத்துக்காக வழங்கப்பட்டது.சிறந்த படமாக பாகுபலியும், தமிழில் சிறந்த படமாக விசாரணை தேர்வு செய்யப்பட்டது. துணை நடிகர் விருதை விசாரணை படத்துக்காக சமுத்திரக்கனி வாங்கினார்.

சிறந்த படத்தொகுப்பாளராக மறைந்த கிஷோர் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்திற்கு வாங்கினார். சிறந்த இசையமைப்பாளராக தாரை தப்பட்டை படத்திற்கு பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வாசிக்க…

ஜனாதிபதி மாளிகையில் பத்ம விபூஷன் விருதை பெற்ற ரஜினி..!!

1:39 AM |
இந்திய சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ என்றழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அவருடன் இயக்குனர் எஸ். ராஜமௌலி, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் சகோதரருடன் கலந்துகொண்டார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com