விஜய் – அமலாபால் பிரிய இந்த படம்தான் காரணமாம்..!!

1:47 AM |
நடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனுஷின் அடுத்த படத்திலும் அவர்தான் நாயகி என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் நடிக்க வந்ததால் அமலாபால் – விஜய் உறவில் விரிசல் விழுந்துவிட்டதாகவும் இது விவாகரத்தில் முடிய அதிக வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது. குறிப்பாக விஜய் எவ்வளவோ சொல்லியும் அம்மா கணக்கு படத்தில் அமலாபால் நடித்ததே இந்த பிரிவிற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
மேலும் வாசிக்க…

அமலாபாலின் கலங்கவைக்கும் கவர்ச்சிப் புகைப்படங்கள்..!!

12:07 AM |
நடிகை அமலா பால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்கில் தீயாக பரவி உள்ளது.

இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும் அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தோழிகளுடன் பார்ட்டிகளுக்கு செல்வது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என்றும் உள்ளார்.

அமலா சூர்யாவுடன் சேர்ந்து பசங்க 2 படத்தில் நடித்துள்ளார். இது தவிர அவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். திருமணமான பிறகு சிலருக்கு வெயிட் போடும்.

ஆனால் அமலா திருமணத்திற்கு முன்பு இருந்தது போன்றே தற்போதும் சிக்கென்று உள்ளார். அவர் என்ன தான் சாப்பிட்டாலும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து உடல் எடை அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்.
இந்நிலையில் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்கையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக்கில் தீயாக பரவியுள்ளது. ஜிம்மில் அவர் சிக்கென்ற இடுப்பைக் காட்டிக் கொண்டு கொடுத்த போஸ் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.







மேலும் வாசிக்க…

கிளாமராக நடிக்கத் தயாராகும் அமலாபால்..!!

2:57 AM |
இயக்குனர் விஜய்யைத் திருமணம் செய்த பின் அமலா பால் நடிப்பிலிருந்து விலகி விடுவார் என்றுதான் திரையுலகத்தினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் விலகாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
திருமணத்திற்குப் பின் அவர் சூர்யா ஜோடியாக பசங்க 2 படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் சூர்யாவின் மனைவியாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரம்தான் அது.

தமிழில் அடுத்து அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் மீண்டும் அம்மா கதாபாத்திரத்தில் அம்மா கணக்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கன்னடத்தில் சுதீப் இயக்கத்தில் ஹெப்புலி என்ற படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் மட்டுமே நடித்த அமலா பால் முதல் முறையாக கன்னடத்தில் நடிக்க உள்ளார். தெலுங்கில் ஏற்கெனவே இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்த அமலா பால் திருமணத்திற்குப் பின் எந்த தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.

தெலுங்கில் ஹீரோயின்கள் என்றாலே அவர்களை கிளாமராகக் காட்டுவதுதான் வழக்கம். அமலா பால் திருமணத்திற்குப் பிறகு அப்படி நடிப்பாரோ, மாட்டாரோ என்ற சந்தேகத்தில்தான் யாரும் அவரை அணுகாமல் இருந்திருக்கிறார்கள். டோலிவுட்டில் சிலர் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு கிளாமராக நடிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால், அதற்கு சம்பளத்தை அதிகம் தர வேண்டும் என்று அமலா பால் கேட்டதாகவும் டோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இது உண்மையா, பொய்யா என்று அமலா பால்தான் சொல்ல வேண்டும்.
மேலும் வாசிக்க…

பசங்க 2 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி..!!

7:12 PM |
மேலும் வாசிக்க…

‘பசங்க 2’ வெற்றி எதிரொலி – இயக்குனருக்கு கார் பரிசளித்த சூர்யா..!!

1:38 AM |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து சமீபத்தில் வெளியான ‘பசங்க 2’ திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ள சூர்யா, இயக்குனர் பாண்டிராஜூக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ள கதகளி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
மேலும் வாசிக்க…

சிம்பு குறித்து வாய் திறந்த பாண்டிராஜ்.. அப்படி என்ன சொன்னார்..!!

9:46 PM |
பசங்க 2 படத்தை ரிலீஸ் செய்த பாண்டிராஜ் அடுத்து கதகளி, இது நம்ம ஆளு படங்களின் வெளியீட்டுக்காக காத்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது நம்ம ஆளு படம் மற்றும் சிம்பு குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, ” சிம்பு ஒரு திறமைசாலி என்பதில் துளியும் சந்தேகமில்லை. அவர் ஒரு நல்ல நடிகர். நல்ல மனிதர். ஆனால் ஸ்பாட்டுக்கு லேட்டாக வருவதுதான் அவருக்கும் எனக்குமான பிரச்சனை. இதை மாற்றிக்கொண்டால் அவர் இன்னும் உயரத்தை அடைவார்” என்றார்.
மேலும் வாசிக்க…

பசங்க 2 அங்கு மட்டும் ஏன் ரிலிஸ் ஆகவில்லை? வெளிவந்த தகவல்

6:18 PM |
உலகம் முழுவதும் இன்று சூர்யா தயாரித்த பசங்க-2 படம் திரைக்கு வந்துள்ளது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.இந்நிலையில் இப்படம் தெலுங்கிலும் ரிலிஸாவதாக இருந்தது. ஆனால், இன்று சொன்னப்படி ரிலிஸாகவில்லை.

என்ன என்று விசாரித்தால் தமிழில் படத்தின் ரிசல்ட்டை பொறுத்து தெலுங்கில் ரிலிஸ் செய்யலாம் என்று முடிவெடுத்தார்களாம்.

அதன்படி படமும் நல்ல விமர்சனம் வருவதால் இனி தெலுங்கு விற்பனையும் அதிகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

தனுஷ் இடத்தை பிடித்த அமலாபால்..!!

4:29 AM |
தனுஷுடன் இணைந்து ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த நடிகை அமலாபால், திருமணத்திற்கு பின்னரும் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் கோலிவுட்டில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

அமலாபால் சூர்யாவுடன் நடித்த ‘பசங்க 2’ விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் உலகின் முன்னணி கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான Intel Security என்ற நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ‘Most Sensational Celebrity’ என்ற சர்வேயை எடுத்து வருகிறது. இந்த வருடம் எடுக்கப்பட்ட சர்வேயில் நடிகை அமலாபால், நடிகை தனுஷை பின்னுக்கு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

கோலிவுட் செலிபிரட்டிகளின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தும் சைபர் க்ரைம் கிரிமினல்கள் குறித்து Most Sensational Celebrity என்ற சர்வேயை எடுத்து வரும் இந்த நிறுவனம், கடந்த 2014ஆம் ஆண்டு எடுத்த சர்வேயில் நடிகர் தனுஷ் டாப் இடத்தில் இருந்தார். ஆனால், இந்த வருடம் அந்த பட்டியலில் இருந்து தனுஷ் வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக ஐந்தாவது இடத்தில் அமலாபால் இணைந்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் நான்கு இடத்தில் ஆர்யா, சூர்யா, விஜய், எமிஜாக்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் ஐந்தாவது இடத்தில் தனுஷிற்கு பதிலாக அமலாபால் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட செலிபிரட்டிகளின் புகைப்படங்களை சைபர் க்ரைம் கிரிமினல்கள் அதிகளவு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது

மேலும் வாசிக்க…
2015 Thediko.com