சென்சாரில் ஹாட்ரிக் அடித்த நயன்தாரா..!!

1:57 AM |
ஏ.கே.சாஜன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘புதிய நியமம்’ மலையாள திரைப்படம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்சார் செயப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன்மூலம் மாயா, நானும் ரௌடிதான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நயன்தாரா படத்துக்கு தொடர்ச்சியாக யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
மேலும் வாசிக்க…

விடிய விடிய விக்னேஷ் சிவனுக்கு பார்ட்டி கொடுத்த நயன்தாரா..!!

9:24 PM |
விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான
நானும் ரௌடிதான் படம் திரையரங்குகளில் பட்டயகிளப்பிக் கொண்டிருக்கிறது. இதற்காக தனுஷ் ஏற்கனவே படக்குழுவினருக்கு பார்ட்டி வைத்துவிட்டார்.

இந்நிலையில் நயன்தாரா, தான் தனியாக ஒரு விருந்து வைப்பேன் என்று இயக்குனருக்கு மட்டும் ஸ்பெஷலாக விடிய விடிய விருந்து வைத்துள்ளார் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதுவும் சாதாரண விருந்து இல்லையாம், விக்னேஷ் சிவன் அவரது வாழ்க்கையில் இதுவரை இப்படி ஒரு விருந்தை பார்த்ததே இல்லையாம், அப்படி ஒரு விருந்து என்கின்றனர். அதோடு இவர்கள் இருவருக்கும் இடையே காதல், அது திருமணம் வரை சென்றுவிட்டது என்றும் சில பல செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது.
மேலும் வாசிக்க…

முதல் 2 இடங்களை கைப்பற்றிய வேதாளம், நானும் ரௌடிதான்..!!

4:08 AM |
 அடுத்தடுத்து வெளியான தனது இரண்டு ஆல்பங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்த உற்சாகத்திலிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்.

 தனுஷ் தயாரிப்பில், விஜய்சேதுபதி - நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் பாடல்கள் இரண்டு வாரத்திற்கு முன்பு ‘சிங்கிள் ட்ராக்’காக ஒவ்வொரு பாடலாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அஜித்துடன் முதல்முறையாக அனிருத் இணைந்திருக்கும் ‘வேதாளம்’ படத்தின் பாடல்கள் கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்டன.

யூத்களுக்கு மிகவும் பிடித்த ஆல்பமாக ‘நானும் ரௌடிதான்’ பாடல்களும், தல ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கும் ஆல்பமாக ‘வேதாளம்’ படத்தின் பாடல்களும் தற்போது பெரும்பாலான எஃப்.எம்.களிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.அதேபோல் ஐ ட்யூன்ஸில் தரவிறக்கம் செய்யப்படும் ‘டாப் 10’ தமிழ் ஆல்பங்களில் அஜித்தின் வேதாளம் முதலிடத்திலும், விஜய்சேதுபதியின் ‘நானும் ரௌடிதான்’ இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.

 தனித்தனி பாடல்களைப் பொறுத்தவரை வேதாளம் படத்தின் ‘ஆலுமா டோலுமா...’ முதலிடத்திலும், நானும் ரௌடிதான் படத்தின் ‘நீயும் நானும்...’ பாடல் 2வது இடத்திலும் உள்ளது. டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் வேதாளம், நானும் ரௌடிதான் படப் பாடல்களே 9 இடங்களை கைப்பற்றியிருக்கின்றன.இந்திய அளவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘தமாஷா’ ஆல்பம் முதலிடத்திலும், வேதாளம், நானும் ரௌடிதான் 2வது மற்றும் 3வது இடங்களிலும் இடம்பிடித்திருக்கின்றன.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com