வியன்னாவில் தத்தளித்த வித்யூலேகா..!!

11:41 PM |
காமெடி நடிகையான வித்யூலேகாவின் பாஸ்போர்ட் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆஸ்திரியாவில் திருடப்பட்டதால், ட்விட்டர் மூலம் உதவியை நாடியுள்ளார்.

நீதானே என்பொன்வசந்தம் படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. பிறகு பல ஹிட் படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் கலக்கிவருகிறார். சமீபத்தில் நண்பர்களுடன் ஆஸ்திரியா சென்றிருந்த போது பாஸ்போர்ட், மற்றும் முக்கிய ஆவணங்களை ஹோட்டல் வராண்டாவிலேயே திருடப்பட்டதால் தற்போது சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து ,எனது   பாஸ்போர்ட், கார்ட், பணம் என அனைத்தும் அடங்கிய பேக் ஹோட்டல் வராண்டாவிலேயே திருடப்பட்டு விட்டது.

எவ்வளவு சீக்கிரம் முடியோ அவ்வளவு சீக்கிரம் எனக்கு இந்திய தூதரகத்துடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  சிசிடிவி கேமராவில் பதிவான விஷயங்களைக் காண எனக்கு அனுமதி இல்லை. ஆனால் ஆஸ்திரிய போலீஸார் பார்த்துள்ளனர். ஒரு மனிதர் என்னை திசைதிருப்ப வேண்டி ஒரு முகவரிக்கு எப்படிச் செல்ல வேண்டும் எனக் கேட்டான். நான் எனக்குத் தெரியாது எனக் கூறினேன். அவனது நண்பன் எனக்கு பின்னால் வந்து எனது பேக்கை எடுத்து விட்டான்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தியத் தூதரகம் எனக்கு உதவும் என நம்புகிறேன். ஆஸ்திரிய போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். நான் நாளை தூதரகத்திற்கு செல்லவிருக்கிறேன். நண்பர்களுடன் நினைத்து மகிழ வேண்டிய பயணமாக இருந்த இந்த ட்ரிப் தற்போது சோகமான முடிவாக அமைந்துள்ளது. பணம், பாஸ்போர்ட் என அனைத்தும் இழந்துவிட்டேன். என் விதி என நினைக்கிறேன்.

பிரதமரின் ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்து உதவி கேட்டுள்ளார் வித்யூலேகா. தற்சமயம் குஷ்பூ உள்ளிட்டோர் ட்விட்டரில் வித்யூலேகாவுடன் தொடர்பிலேயே இருக்கிறார்கள். பல நண்பர்கள் அவருக்கு ஆறுதலும் கூறி வருகிறார்கள். ஒரு ஹோட்டல் வராண்டாவிலேயே இப்படி திருடப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் வாசிக்க…

பெண்கள் பற்றிய சர்ச்சை கருத்து! பிரச்சனையில் பிரியாமணி..!!

11:05 PM |
பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த சட்டகல்லூரி மாணவி ஜிஷாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், இது பற்றி நடிகை பிரியாமணியின் கருத்து அவருக்கு பெரிய பிரச்னையை கொண்டுவந்துள்ளது.

இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




மேலும் வாசிக்க…

விஜய் ட்வீட்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை! - மறுக்கிறார் அமீர்..!!

2:50 AM |
தெறி படத்தால் நஷ்டமடைந்தேன் என்று இயக்குநர் அமீர் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார் என்று பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அமீர் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்திற்கான மதுரை பகுதி விநியோக உரிமையை இயக்குநர் அமீர் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அமீரின் ட்விட்டரில், “ தெறியின் மதுரை பகுதி விநியோக உரிமையை வாங்கினேன். ஆனால் தெறி படத்தால், 50% அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.  தயாரிப்பாளர் தாணுவுக்கு எதிராக போராட்டம் நடத்தவிருக்கிறேன்” என்று இயக்குனர் அமீர் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.


அந்த ட்விட்டர் பதிவிற்கு பதில் கடிதம் ஒன்றை அமீர் வெளியிட்டுள்ளார். அதில்,

விஜய்யின் வளர்ச்சி பிடிக்காத சிலருடைய செயல்களால் தெறி படம் வெளிவருவதில் இருந்த சிக்கல்களையும், வெளியான நாள் முதல் வந்துகொண்டிருக்கக்கூடிய தவறான தகவல்களையும் நான் அறிவேன். அதே நேரத்தில் தெறி படத்திற்கான விநியோகம் குறித்து என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் ஒரு செய்தி பதிவிட்டிருப்பதாக இன்று காலை அறிந்தேன்.

எனக்கென்று அதிகாரப்பூர்வமான முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கம் நான் வைத்துக்கொள்ளவில்லை என்பதை கூறிக்கொள்கிறேன். என்னுடைய பெயரில் இருக்கும் முகநூல் பக்கமோ, ட்விட்டர் பக்கமோ என்னுடையது இல்லை. யாரோ சில தவறான எண்ணம் கொண்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெர்வித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
மேலும் வாசிக்க…

அஜித் உடல்நிலை பற்றி வதந்தி.காவல்துறையில் புகார் அளிக்க முடிவு..!!

10:06 PM |
அஜித் நடித்து வரும் படங்கள், படங்களின் பெயர்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுபவர் சுரேஷ் சந்திரா. இவருடைய ட்விட்டர் தளத்தை SCREENSHOT எடுத்து போட்டோ ஷாப் மூலமாக மாற்றி "அஜித்துக்கு மாரடைப்பு. அவருக்காக பிராத்தனை செய்யுங்கள்" என்று மாற்றி வாட்ஸ்-அப் மூலமாக பரப்பினார்கள்.

அந்த புகைப்படம் வாட்ஸ்-அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, "அஜித்தின் உடல்நிலை குறித்து சில தீய எண்ணம் படைத்தவர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

அவர் நலமாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.
மேலும், இந்த வதந்தி பரப்பியவர்கள் மீது போலீஸார் புகார் அளிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com