மருது திரைவிமர்சனம் - Marudhu Review

2:38 AM |
விஷால் சமீப காலமாக சீவிவிட்ட காளையின் கொம்பு போல் கூராக உள்ளார். நடிகர் சங்க வெற்றி, திருட்டு விசிடி அதிரடி முடிவு என பம்பரமாக சுழலும் இவருக்கு படத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்தால் எப்படியிருக்கும்?.

அப்படி ஒரு கதாபாத்திரத்தை குட்டிபுலி, கொம்பன் வெற்றிகளை தொடர்ந்து முத்தையா விஷாலுக்காக ரெடி செய்துள்ள படம் தான் மருது.

கதைக்களம்

ராஜபாளையத்தில் பெரிய தலைக்கட்டு ராதாரவி, இவர் கை காட்டியவர் தான் அந்த ஊரில் பல பதவிகளை பிடிக்கிறார்கள். ராதாரவியின் இடது கை போல் அவர் சொல்லும் அத்தனை அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வேலைகளை முடித்துக்கொடுப்பவர் ஆர்.கே.சுரேஷ்.

இவரை அடுத்த MLA ஆக்க ராதாரவி முயற்சி செய்து வருகிறார். இதே ஊரில் லோட் மேனாக (மூட்டை தூக்குபவர்) விஷால், தன் அப்பத்தாவின் வளர்ப்பில் வீரமாகவும், ஊரில் எந்த தவறு நடந்தாலும் முத்தையாவின் டெம்ப்ளைட் ஹீரோவாக வலம் வருகிறார்.

ஸ்ரீதிவ்யாவை ஒரு கோவிலில் பார்க்க, பார்த்தவுடன் மோதல் பிறகு காதல் என விஷாலின் வாழ்க்கை சந்தோஷமாக செல்ல, ஸ்ரீதிவ்யாவின் அம்மாவை ஒரு சில காரணங்களுக்காக ஆர்.கே.சுரேஷ் கொலை செய்தது விஷாலுக்கு தெரிய வருகிறது.

அவர் இறந்ததற்கு ஏதோ ஒரு விதத்தில் விஷாலும், அவருடைய அப்பத்தாவும் காரணமாக அமைய, பிறகு என்ன அப்பத்தா விஷாலுக்கு கொம்பை சீவி விட விஷால் ஆர்.கே.சுரேஷின் அநியாயங்களை அடக்குவது மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஷால் 6 அடி உயரம், 5 பேர் இல்லை 50 பேர் வந்தாலும் அடித்து நொறுக்குகிறார், அதை நம்பவும் முடிகின்றது. முரட்டு இளைஞன், பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர், அப்பத்தாவிற்கு செல்ல பேரன், அநியாயங்களை தட்டி கேட்பவர் என அனைத்திலும் புகுந்து விளையாடியுள்ளார்.

ஸ்ரீதிவ்யா முதன் முதலாக நிறைய நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை வெறும் ஸ்கீரின் வந்து மட்டும் போகும், ஸ்ரீதிவ்யா இதில் விஷாலையே கை நீட்டி அடிக்கும் அளவிற்கு தைரியமான பெண். தென் மாவட்டத்து பெண்களுக்கே உரிய பாவனை.

யாருயா இந்த அப்பத்தா? என்று தான் படம் முடிந்து வெளியே வருபவர்கள் பலரும் கேட்கும் கேள்வி. படத்தின் மற்றொரு ஹீரோ என்று கூட கூறலாம், காமெடியில் ஆரம்பித்து விஷாலுக்கு வீரம் புகுட்டும் காட்சி வரை சரவெடி தான். அதிலும் விஷாலை, ஸ்ரீதிவ்யாவை காதலிக்க வைக்கும் காட்சி காமெடி கலக்கல். அதுமட்டுமில்லாமல், ‘என் பேரனுக்கு எந்த பதவியும் வேண்டாம், அவன் நினைச்சா எந்த பதவிலையும் அவனே போய் உட்காருவான்’ என பன்ச் வசனம் வேறு, தெரிந்து தான் பேசினாரா என்பது கேள்விக்குறி.

சூரி காமெடி நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிப்பு வருகின்றது, கிராமத்து கதை என்றாலே சூரி கால்ஷிட் தான் போல இனி, அதே நேரத்தில் கிளைமேக்ஸில் செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலங்க வைத்துள்ளார். இதையெல்லாம் விடுங்க, ராதாரவி-விஷால் காம்பினேஷன் படத்தில் உள்ளது.

பலரும் எதிர்ப்பார்த்த காட்சி, பேசிய அளவிற்கு தான் இல்லை என்றாலும், விஷால் மனதில் தோன்றியதை படத்தில் கேட்டு விட்டார். ஆனால், முத்தையா இனி இதுப்போன்ற கதைகளையே தொடர்ந்து எடுக்க வேண்டுமா? என கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனெனில் அம்மா செண்டிமெண்ட், மாமனார் செண்டிமெண்ட், தற்போது அப்பத்தா செண்டிமெண்ட் ஒரே பாணியில் தான் அனைத்து படமும் இருக்கின்றது.

இந்த ஊரில் போலிஸ் எல்லாம் இருக்கிறார்களா? என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. சுரேஷ் அவர் வீட்டு ஆட்களை தவிர எல்லோரையும் வெட்டுகிறார், குத்துகிறார், லாஜிக் அத்துமீறல். இத்தனை வன்முறையா தேவையா முத்தையா சார்?. டி.இமான் இசையில் பாடல்கள் தாளம் போட வைத்தாலும் பின்னணி இசை காதை பதம் பார்க்கின்றது. வேல்ராஜ் ஒளிப்பதிவு என்று யாராவது சொன்னால் தான் தெரியும், ஏதோ சிறு பட்ஜெட் படம் போல் உள்ளது.

க்ளாப்ஸ்

விஷால் கிராமத்து இளைஞனாக இறங்கி அடித்துள்ளார், விஷால்-ராதாரவி சம்மந்தப்பட்ட காட்சிகள்.

அப்பத்தா முழுப்படத்தையும் தாங்கி செல்கிறார். தமிழ் சினிமாவிற்கு குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு.

படத்தின் முதல் பாதி சூரி காமெடி, விஷால் அடிதடி என விறுவிறுப்பாக செல்கின்றது. குறிப்பாக பெண்களை மதிக்கு வசனங்கள்.


பல்ப்ஸ்

லாஜிக் மீறல், சமூகத்திற்கு சில தேவையற்ற குறியீடு வசனங்கள், கண்டிப்பாக முத்தையா இதை அடுத்த படத்தில் மாற்ற வேண்டும்.

இரண்டாம் பாதி யூகிக்க கூடிய பல காட்சிகள், கிளைமேக்ஸ் உட்பட, பார்த்து பழகி போன கதைக்களம்.

மொத்தத்தில் மருது ஜனரஞ்சக படங்களை விரும்புவோர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கலாம்.


ரேட்டிங்- 2.5/5
மேலும் வாசிக்க…

மருது படப்பிடிப்பில் காயமடைந்த விஷால்..!!

9:39 PM |
கொம்பன் படத்துக்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் மருது.

இப்படத்தின் படபிடிப்பு தேனீ மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.கடந்த சில தினங்களாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வந்தது படக்குழு, இன்று படபிடிப்பின்போது விஷாலுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இனிதே படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதை விஷாலே தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

டைரக்டர் நடிகை லவ் குறுக்கே கட்டைய போடும் விஷால்..!!

9:15 PM |
“யாரு வேணும்னாலும் யாரை வேணும்னாலும் காதலிச்சுட்டு போகட்டும், அல்லது கவனிச்சுட்டு போகட்டும்… அடியேனுக்கென்ன?’’ என்று போவது நட்புக்கு அழகா? நல்ல நட்புக்கு அது அழகில்லை அல்லவா? அதற்காகதான் குறுக்கே விழுந்து கட்டையை போட்டிருப்பார் போலும் என்று விஷால் பற்றி குஷாலாகிறது கோடம்பாக்கம். ஆனால், “ஹீரோ இப்படி பிடிவாதம் பிடிச்சா, நாங்கள்லாம் எப்போ நல்ல மாதிரி சிரிக்கறது?” என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் குட்டிப்புலி முத்தையா. இவரது முதல் படத்தில் லட்சுமிமேனன்தான் ஹீரோயின்.

அதற்கப்புறம் இவர் இயக்கிய ‘கொம்பன்’ படத்திலும் லட்சுமிமேனனையே நடிக்க வைத்தார் முத்தையா. ஒரு குயர் நோட்டுக்கு இப்படி ரெண்டு குயர் சைசுக்கு அட்டை போட்ட பின்பும் அடங்கவில்லை அவரது ஆசை. தொடர்ந்து மூன்றாவது படத்திலும் லட்சுமிமேனனை ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தாராம். ஆனால் அந்த மூன்றாவது படமான ‘மருது’ படத்தின் ஹீரோ விஷாலாச்சே? லட்சுமிமேனன் வேண்டாம் என்று அவர் பிடிவாதம் பிடிக்க, “எனக்காக ப்ளீஸ்…” என்று முத்தையா கெஞ்ச, சூழ்நிலை சூடாகவே இருந்தது பல நாட்களுக்கு. கடைசியில் விஷாலுக்குதான் வெற்றி. லட்சுமிமேனன் இருக்க வேண்டிய இடத்தில் ஸ்ரீதிவ்யா நடித்துக் கொண்டிருக்கிறார் இப்போது.

படப்பிடிப்பில் சகஜமாக இருந்தாலும், லட்சுமிமேனன் இல்லாத ஷுட்டிங் ஸ்பாட், முத்தையாவை என்னவோ பண்ணியிருக்க வேண்டும். நடுவில் விக்ரம் பிரபுவுக்கு கதை சொல்லி ஓ.கே பண்ணியவர், “இந்த படத்தில் உங்களுக்கு ஜோடியா லட்சுமிமேனன்தான் நடிப்பார். நீங்க முடியாதுன்னு சொல்லவே கூடாது” என்று கூறிவிட்டாராம் கட் அண்டு ரைட்டாக. ஆக நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. முத்தையாவின் நான்காவது படத்துக்கும் கதாநாயகி லட்சுமிமேனனேதான்!

இப்ப என்னா பண்ணுவீங்க? விஷால்… இப்ப என்னா பண்ணுவீங்க?
மேலும் வாசிக்க…
2015 Thediko.com