இதுதான் "கபாலி" கதை..!!

5:18 AM |
கபாலி படத்தில் மகளைத் தேடி அலையும் வயதான தாதா வேடத்தில், ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ் மற்றும் மெட்ராஸ் கலையரசன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி.

இதன் படப்பிடிப்பை சென்னை மற்றும் மலேசியாவில் நடத்தத் திட்டமிட்ட படக்குழுவினர், அதே போன்று தற்போது மலேசியாவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தில் வயதான தாதாவாக நடிக்கும் ரஜினி இந்தப் படத்தில் காணாமல் போன தனது மகளைத் தேடி அலைபவராக நடிக்கவிருக்கிறாராம்.

தாதா வாழ்க்கையை விட்டு விலகியிருக்கும் ரஜினி மீண்டும் தனது மகளுக்காக அந்த இருட்டு உலகத்திற்குள் போகிறார். காணாமல் போன மகளை மீட்டாரா, மீண்டும் தாதாவாக மாறினாரா போன்ற கேள்விகளுக்கான விடையாக கபாலி உருவாகி வருகிறது.

ஏற்கனவே படத்தின் இயக்குநர் ரஞ்சித் இந்தப் படத்தில் ரஜினிக்கு பன்ச் வசனங்களோ, காதல் காட்சிகளோ கிடையாது என்று தெரிவித்து இருந்தார்.

ரஞ்சித் சொல்லியதையும் தற்போது வெளியாகி இருக்கும் தகவலையும் வைத்துப் பார்த்தால் ரஜினி, கபாலியில் தனது முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் படத்தின் கதையை மட்டுமே நம்புகிறார் என்று தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் இமேஜை விட்டு பன்ச் வசனங்கள், காதல் காட்சிகள் இல்லாமல் நடிக்கும் ரஜினியைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கபாலி ரஞ்சித்திற்கு ஹாட்ரிக்கை அருள்புரிவாரா?
மேலும் வாசிக்க…

இதுதான் "கபாலி" கதையா???

6:39 PM |

Tags: Kabali Movie Online , Kabali Vetri Poster , Kabali Poster , கபாலி விமர்சனம் , Kabali Movie Review , Kabali Movie Teaser , Kabali Movie Teaser , Kabali Movie Online HD , கபாலி திரை விமர்சனம்
மேலும் வாசிக்க…

கபாலியின் கதை லீக் ஆனது - விவரம் உள்ளே

6:39 PM |
சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதையை வெளியே கசியவிடாமல் படக்குழு பாதுகாத்து வந்தனர்.

ஆனால் தற்போது வந்த தகவல் படி மலேசியாவில் பயங்கர தாதாவாக இருக்கும் கபாலி, மலேசிய ஜெயிலில் இருந்து திரும்பி வந்து, (பாஷா படம் போல திருந்தி வந்து) தன் முதிர்ந்த காலத்தை அவருடைய மகளான தன்ஷிகாவுடன் செலவிடுகிறார்.

சில வருடங்களுக்கு பிறகு, யாரென்று தெரியாத வில்லன்களால் தன்ஷிகா கடத்தப்பட, அதற்கு பிறகு மகளை காப்பாற்ற வில்லன்களை தேடி வேட்டையாடும் கதை தான் 'கபாலி'.குறிப்பாக இந்த படத்தில் 'சூப்பர் ஸ்டார்' என்ற இமேஜ் எந்த இடத்திலும் காட்டாமல், மிக எதார்த்தமாக ரஜினியை காட்ட போகிறாராம் பா.ரஞ்சித்.
மேலும் வாசிக்க…

கபாலிக்காக முடியை இழந்த தன்ஷிகா..!!!

1:23 AM |
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ‘கபாலி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவும், ரஜினிக்கு மகளாக தன்ஷிகாவும் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினிக்கு  மகளாக நடிக்கும் தன்ஷிகா அதற்கு முற்றிலும் மாறுபட்டு மிகவும் போல்டான கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தன்ஷிகா போதை பழக்கத்திற்கு அடிமையாகி, வில்லன்களிடம் மாட்டிக்கொள்வது போன்ற காட்சிகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால், தற்போது ஆண்கள் அணியும் காஸ்ட்யூம்களுடன், ஷார்ட் ஹேர்ஸ்டைல் லுக்கில் நடித்துள்ளார்.

சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், அடுத்தகட்டமாக மலேசியா மற்றும் ஹாங்காங் செல்லவுள்ளனர்.
மேலும் வாசிக்க…

ரஜினி படத்தின் தலைப்பு கபாலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

8:11 AM |
ரஜினி, ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போவது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்திற்கு தலைப்பு வைக்க படக்குழுவினர் கடந்த சில நாட்களாக பல்வேறு தலைப்புகளை தேர்வு செய்து வந்தனர்.

இந்நிலையில், முதலில் இப்படத்திற்கு ‘காளி’ என்று பெயர் வைக்கப்போவதாக கூறப்பட்டது. பின்னர், ‘கண்ணபிரான்’ என்ற தலைப்பு தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த இரண்டு தலைப்பையும் புறக்கணித்துவிட்டு ‘கபாலி’ என்று தலைப்பு வைக்கப்போவதாக கூறப்பட்டது.

கடைசியில், இந்த தலைப்பையே ரஜினியின் புதிய படத்திற்கு வைக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். இதை இயக்குனர் பா.ரஞ்சித் உறுதிபடுத்தியுள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் இந்த தலைப்பை வெளியிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, ரஜினி படம் ‘கபாலி’ என்ற தலைப்புடன் உருவாகவுள்ளது. இப்படத்தில் ரஜினி பிரபல தாதாவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். மேலும், தன்ஷிகா, கலையரசன், தினேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com