காம இச்சையால் வந்த கொடுரம் - வீடியோ அவசியம் பார்க்க..!!

11:56 PM |
இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எத்தனையோ சமூக சீர்கேடுகள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதிலும் செல்போன் - கணணி பாவனை அதிகரிப்பு ஒரு பக்கம் நன்மை அளித்தாலும் எமது இளைஞர் யுவதிகள் இந்த செல்போன் கலாசராத்தால் சீரழித்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறார்கள்.

செல்போன்  இணையம் இவற்றால் காதல் வலையில் வீழ்ந்து காம வலைக்குள் சிக்கி  தற்கொலை செய்தவர்கள் ஏராளம். இதற்கு முக்கிய காரணம் காதல் என்ற பெயரில் ஆண்கள் பெண்களை ஏமாற்றி தமது வலைக்குள் வீழவைத்து படுக்கையறை வரை அழைத்து தமது காம இச்சையை தீர்த்துக்கொள்கிறார்கள்.

இவ்வாறான இழிவான செயலுக்கு தொழில்நுட்ப உதவிகளை பெற்று ஆதாரமாக எடுத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக அந்தரங்க வீடியோக்களை பெண்களுக்கு தெரியமால் தமது செல்போனில் படம் பிடித்து அல்லது ரகசிய காமரா மூலம் படம் பிடித்து பின்னர் அதனை வைத்து குறித்த பெண்ணை மிரட்டி தமது பாலியல் இச்சைகளை தீர்த்து கொள்கிறார்கள். இது இன்று உலகம் எங்கும் பரவலாக நடக்கிறது.

இதனை மையமாக வைத்து அண்மையில் வெளிவந்த ஒரு குறும்படத்தினையே நீங்கள் பார்க்க போகிறீர்கள். இது  சமுதாய விழிப்புணர்வு கருதி இங்கே வெளியிடப்படுகிறது...
    


மேலும் வாசிக்க…

கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு.!!

4:25 AM |
நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.

ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.

எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.

வழி 1:  மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.

இதில் Devices With Removable Storage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.

இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.

வழி 2:  பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.

இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.

இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.

உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com