இன்று ஆரம்பம் விஜய்யின் அதிரடி, முதல் காட்சி இவருடன் தானா???

12:06 AM |
இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போட்டோஷுட் முடிந்து இன்று படப்பிடிப்பு தொடங்கியது.

சென்னை பின்னி மில்லில் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படுகின்றது. படத்தின் முதல் காட்சியே காமெடி நடிகர் சதீஷுடன் தான் விஜய் நடிக்கவுள்ளாராம்.

இதை தொடர்ந்து இங்கு விஜய்யின் ஓப்பனிங் பாடலையும் எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் வாசிக்க…

நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு விஜய் வராததற்கு இது தான் காரணம் - வெளிவந்த அதிரடி தகவல்

6:20 AM |
இளைய தளபதி விஜய் எந்த நடிகருக்கு பிரச்சனை என்றாலும் முதலில் வந்து நிற்பவர்.

ஆனால், நேற்று நடிகர் சங்க நலனுக்காக நடந்த கிரிக்கெட் போட்டியில் விஜய் கலந்துக்கொள்ளததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுக்குறித்து விசாரிக்கையில், நடிகர் சங்கம் தரப்பில் இந்த போட்டிக்கு அழைப்பு விடுத்த போது விஜய், ‘கண்டிப்பாக வர முயற்சி செய்கிறேன்’ என கூறியுள்ளார்.

ஆனால், தற்போது தான் தெறி படம் ரிலிஸாகியுள்ளது, படம் பல சிக்கலினால் சில இடங்களில் ரிலிஸாகவே இல்லை, இந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பதிலேயே விஜய் தற்போது தீவிரம் செலுத்தி வருகிறார்.

இதன் காரணமாகவே விஜய்யால் வர முடியவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும் வாசிக்க…

ரசிகர்களுக்கு விஜய் அனுப்பிய நெகிழ்ச்சியான செய்தி..!!

12:27 AM |
இளைய தளபதி விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த தெறி வசூல் சாதனை படைத்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. குறிப்பாக விஜய் புலி தோல்வியை கடந்து கிடைத்த வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார்.

இதுக்குறித்து விஜய், ‘இப்படத்தை வெற்றி படமாக்கிய என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி, இதேபோல் தொடர்ந்து உங்களுக்காக நல்ல படங்களை கொடுப்பேன்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

இளைய தளபதி விஜயின் அறிமுக காட்சி சும்மா தெறித்த திரையரங்கம் வீடியோ..!!

11:56 PM |
மேலும் வாசிக்க…

தெறி பிரச்சனையில் அதிரடி முடிவு..!!

6:54 PM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவரவுள்ளது.

ஆனால், இப்படத்தின் டிக்கெட் விலையை காரணம் காட்டி பல திரையரங்குகள் படத்தை எடுக்க முன்வரவில்லை.

இதில் குறிப்பாக கோயமுத்தூர் மற்றும் செங்கல்பட்டில் இன்று மதியம் வரை பேச்சு வார்த்தை நடந்தது.

சமீபத்தில் வந்த தகவலின்படி கோயமுத்தூரில் அரசாங்கம் நிர்ணயித்த தொகைக்கே டிக்கெட் விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது கோயமுத்தூரில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஆனால், செங்கல்பட்டில் தற்போது வரை இழுப்பறியிலேயே உள்ளது, இதனால், பல முக்கிய திரையரங்கில் இன்னும் தெறி உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் வாசிக்க…

தெறி ஆடியோ ரிலீஸ்க்கு முன்பே இணையத்தில் கசிந்த பாடல் பட்டியல்..!!

2:47 AM |
மார்ச் 20 வெளியாக இருக்கும் இளைய தளபதியின் "தெறி" திரைப்படத்தின் பாடல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது, ஆனால் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் இதை வெளியிடவில்லை என்று குழுவினர் கூறி வருகின்றனர். அனால் இந்த பாடல் வரிகள் இணையத்தில் கசிந்ததால் கலங்கி போய் உள்ளனர் படக்குழுவினர்..

இதோ இணையத்தில் கசிந்த பாடல் பட்டியல் உங்களுக்காக:

1. செல்லகுட்டி : பாடகர்- விஜய்.

2. ஜித்து ஜில்லாடி: பாடகர்: தேனிசைத்தென்றல் தேவா.

3. ரங்கம்மா: பாடகர்: டி.ஆர் மற்றும் சோனு டக்கர்.

4.தெறி திரைப்படத்தின் தீம் மியூசிக்.

5.டப் தெறி ஸ்டெப் (#DubTheriStep)

எது உண்மை என்று தெரியவில்லை, ஆடியோ ரிலீஸ் ஆகும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.
மேலும் வாசிக்க…

‘சூப்பர்ஸ்டார் ரஜினி’யை விட ‘இளைய தளபதி விஜய்’தான் “மாஸ்”-சரத்குமார் அதிரடி பேட்டி..!!

10:02 PM |
மேலும் வாசிக்க…

சம்பளத்தை ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் ஏற்றி விட்டாரா கீர்த்தி சுரேஷ்..!!

6:29 PM |
கீர்த்தி சுரேஷ் அடுத்து படத்தில் இளைய தளபதியுடன் ஜோடியாகும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன ரஜினிமுருகன் தான்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருடைய் சம்பளம் ரூ 50 லட்சம் என கூறப்பட்டது,

ஆனால், முன்னணி நாளிதழ் ஒன்று இவரின் சம்பள உயர்வு குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.இதில் ஒரே மாதத்தில் தன் சம்பளத்தை ரூ 25 லட்சம் உயர்த்தி ரூ 75 லட்சமாக்கி விட்டாரம்.
மேலும் வாசிக்க…

விஜய்யின் அனைத்து படங்களும் ஒரே பாடலில்..!!

1:47 AM |
‘இளைய தளபதி’ விஜய்யின் பெருமையை உணர்த்தும் விதமாக மலையாளத்தில் ‘3 ரசிகர்கள்’ எனும் பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. அறிமுக நடிகர்கள் நடிக்கும் இப்படத்தை விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் இதுவரை வெளியான விஜய்யின் 59 படங்களின் தலைப்புகளும் இடம்பெறுமாம். மேலும் இப்படத்தில் விஜய் பற்றிய பல தகவல்களும் இடம்பெறுகிறதாம்.
மேலும் வாசிக்க…

ரசிகர்களை ஏமாற்றிய இளைய தளபதி விஜய்...!!

8:48 AM |
பொதுவாக ஒவ்வொரு விஷேச நாட்களிலும் விஜய்யின் படத்தை பற்றிய ஏதாவது ஒரு விஷயம் வெளியாவது வழக்கம்.

ஆனால் இந்த தீபாவளிக்கு விஜய் படத்தை பற்றிய ஒரு விஷயம் கூட வெளியாகவில்லை.

அதிலும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 59வது படத்தின் டைட்டில் இந்த தீபாவளியன்று வெளியாகும் என விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு இருந்தனர்.

ஆனால் படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு இப்போது வரை ஏதும் வெளியாகவில்லை.இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

அதேசமயம் சில விஜய் ரசிகர்கள் படத்திற்கு தாங்களாகவே வெற்றி, காக்கி போன்ற பெயர்களை வைத்து போஸ்டர்களை டிசைன் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

தல ரசிகர்களோடு இணைந்து டிவிட்டரில் தெரிக்கவிடும் தனுஷ்..!!
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com