விஷால் -வரலட்சுமி திருமணம் விரைவில் அதிரடி அறிவிப்பு..!!

1:22 AM |
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடித்த உடன் அங்குள்ள மண்டபத்தில் முதல் திருமணம் என்னுடையதுதான் நடைபெறும் என்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார். தன்னுடையது காதல் திருமணம்தான் என்றும் லட்சுமிகரமான பெயர்கொண்டவர்தான் தனக்கு மனைவியாக வருவார் என்றும் விஷால் கூறியுள்ளார்.

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டுகின்றனர். இதற்காக நட்சத்திர கிரிக்கெட் வரும் 17ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான முன்னோட்டமாக சன் டிவியில் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிறது. நட்சத்திர சங்கமம், நடிகர்கள் சந்திப்பு என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

இந்த வாரம் டப்மாஷ் செய்து நட்சத்திரங்கள் அசத்தினர். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வருமாறு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திரங்களை பட்டு சேலை, பட்டுவேட்டி கொடுத்து தமிழக நடிகர்கள் அழைப்பு விடுக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ், நடிகர் விஷாலிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வியை முன் வைத்தார்.

அதற்கு விஷால், நான் 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறினார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டி முடித்த பின்னர், அதில் உள்ள திருமண மண்டபத்தில் தன்னுடைய திருமணம் நடைபெறும் என்று கூறினார். உடனே அருகில் இருந்த நடிகை ரேகா, இது காதல் திருமணமா என்று கேட்க, ஆமாம், நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்றார்.

உடனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சங்கீதா, காதல் மனைவியின் பெயரை சொல்லுங்களேன் என்று கூற, லட்சுமிகரமான பெயர் கொண்டவர்தான் தனக்கு மனைவியாக வருவார் என்று விஷால் கூறினார். விஷாலின் இந்த அறிவிப்புக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திரங்கள் அனைவரும் கரஒலி எழுப்ப, நடிகர் சிவகுமார், ஒரு வித்தியாசமான ரியாக்சன் கொடுத்தாரே பார்க்கலாம் அதுதான் ஹைலைட்.
மேலும் வாசிக்க…

பாலிவுட்டை கவர விஜய்யின் மாஸ்டர் ப்ளான்..!!

8:11 AM |
இளைய தளபதி விஜய்க்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழ், கேரளா போக தற்போது ஆந்திராவிலும் இவருக்கான ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் தெறி படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியிடவுள்ளனர். மேலும், வட இந்தியாவிலும் இப்படம் தமிழ் பதிப்பாகவே சில திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

இதனால், வட இந்தியா ரசிகர்களையும் கவரும் விதமாக தெறி படத்தின் ஒரு ஹிந்தி பாடலும் இடம்பெற்றுள்ளது. இதை போனஸ் ட்ராக்காக அட்லீ நேற்று வெளியிட்டார்.
மேலும் வாசிக்க…

ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய சூர்யா..!!

10:42 AM |
சாலைவிபத்தில் அடிபட்ட ஒரு பெண்ணுக்கு சற்றும் தாமதிக்காமல் உதவி செய்துள்ளார் சூர்யா…

சூர்யாவின் எஸ்3 படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஆந்திர பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை ஆந்திரா அருகில் உள்ள சித்தூரில் முடித்துவிட்டு தனது ஹோட்டலுக்குத் திரும்பி கொண்டிருந்தார் சூர்யா.

வழியில் ஒரு கணவன் மனைவி விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் சாலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தாராம். இரவு ஒன்பது மணி வேளையில் அந்தப் பகுதியைக் கடந்தபோது இதை கவனித்த சூர்யா சற்றும் தாமதிக்காமல் அப்பெண்ணை தனது காரில் ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு முதலுதவிகள் செய்துவிட்டு திருப்பதியிலுள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினார்களாம். அதுவரையில் அவர்களுடனே சூர்யா இருந்தாராம்.

உயிருக்குப் போராடிய ஒருவரை உடனடியாக சூர்யா மருத்துவமனையில் சேர்த்த இந்தச் செய்தி ஆந்திராவில் பெரிதாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறதாம்

மேலும் வாசிக்க…

ரசிகர்களின் செயலால் ரஜினி மீது வழக்கு தொடர்ந்த பிரபல மீடியா..!!

12:19 AM |
சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் வட இந்தியா வரை ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது முன்னணி வட இந்தியா மீடியா ஒன்று ரஜினி மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறியுள்ளது.இதில் ‘ரஜினி படம் வரும் ஒவ்வொரு முறையும் பல லிட்டர் கணக்கில் பால் வீணாகின்றது (ரசிகர்கள் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வது)’ என ரஜினி மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com