கவர்ச்சி காட்ட சொல்லி என் பெயரை கெடுத்து விட்டனர்..!!

11:59 PM |
தமிழில், ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. வந்தான் வென்றான், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. தெலுங்கிலும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். இதனால் இந்தியில் வாய்ப்பு தேடி வந்திருக்கிறார். இங்கு 2 இந்தி படங்களில் அவர் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டு இருக்கிறார்.

டாப்சி அளித்த பேட்டி வருமாறு:- 

“நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் பட உலகம் பற்றி அதிகம் தெரிந்து இருக்கவில்லை. கதைகள் தேர்விலும் அக்கறை இல்லாமல் இருந்தேன். நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் நடித்தேன். நிறைய படங்களில் என்னை கவர்ச்சியாகவே நடிக்க வைத்தார்கள். தெலுங்கு படங்களில் அப்படித்தான் நான் வந்தேன். இதனால் என் மீதான மதிப்பு குறைந்தது. கவர்ச்சி வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வந்தன.

எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையாமல் போனது. ஆனால் இப்போது இந்தியில் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வந்துள்ளன. இதன் மூலம் எனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன்.

இந்தியில் சிறந்த நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் போட்டியை சமாளித்து நிலைத்து இருப்பது கஷ்டம். ஆனாலும் நான் எனக்குரிய இடத்தை பிடிக்க கஷ்டப்பட்டு போராடுகிறேன். இந்தியில் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய பிறகு மற்ற மொழி படங்களிலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.” இவ்வாறு டாப்சி கூறினார்.
மேலும் வாசிக்க…

கணிதன் விமர்சனம் - Kanithan Review

11:29 PM |
நடிகர் : அதர்வா
நடிகை : கேத்ரீன் தெரசா
இயக்குனர் : சந்தோஷ்
இசை : டிரம்ஸ் சிவமணி
ஓளிப்பதிவு : அரவிந்த் கிருஷ்ணா

தூர்தர்ஷன் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஆடுகளம் நரேனுக்கு பிபிசி சேனலில் பணிபுரிய வேண்டும் என்பது நீண்டகால ஆசை. ஆனால் அது நிறைவேறாமலே இருக்கிறது.

இவரது மகனான அதர்வா இன்ஜினியரிங் படித்து விட்டு மனோபாலா நடத்தி வரும் தனியார் சேனலில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். தந்தையின் நிறைவேறாத கனவை நிறைவேற்றும்பொருட்டு தான் பிபிசி சேனலில் சேரவேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் அதர்வா.

இந்நிலையில், மனோபாலாவின் மகளான கேத்ரின் தெரசாவுக்கும் அதர்வாவுக்கும் காதல் மலர்கிறது. ஒருநாள் போலி சர்டிபிகேட் மூலம் பல வங்கிகளில் பணம் வாங்கி ஏமாற்றி இருப்பதாக கூறி அதர்வாவை போலீஸ் கைது செய்கிறது.

முதலில் எதுவும் புரியாத அதர்வாவுக்கு, பின்னர் தன்னுடைய சர்டிபிகேட் மட்டுமல்லாமல், பல இளைஞர்களின் சர்டிபிகேட்டுகளும் இதுபோல் போலியாக எடுத்து பல வங்கிகளில் பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவருகிறது.

செய்யாத தவறுக்கு ஜெயிலுக்கு செல்லும் அதர்வா, அங்கிருந்து வெளியே வந்துபோலி சர்டிபிகேட் மூலம் பண வாங்கிய கும்பலை கண்டுபிடித்தாரா? தனது லட்சியமான பிபிசி சேனலில் சேர்ந்தாரா? கேத்ரின் தெரசாவை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தின் முதல் பாதியில் நிருபராகவும் இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அதர்வா. தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. பாடல் காட்சிகளில் சிறப்பாக நடனமாடியிருக்கிறார்.

கேத்ரீன் தெரசா அவரது முந்தைய படமான ‘மெட்ராஸ்’, ‘கதகளி’ ஆகியவற்றில் பார்த்திராத ஒரு புத்துணர்ச்சியான கேத்ரீன் தெரசாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது. கவர்ச்சியில் தாராளம் காண்பித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நரேன், பாக்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் தருண் அரோரா பார்வையாலேயே மிரட்டியிருக்கிறார். வில்லனுக்கு உண்டான தோற்றம் கொண்டு ஸ்டைலீஷாக நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஊடகம் சார்ந்த கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் சந்தோஷுக்கு பாராட்டு. ஒரு நிருபருக்கு ஏற்படும் சிக்கல்களை அவர்களின் திறமைகள் மூலம் எப்படி எதிர்கொள்வது என்பதை சிறப்பாக காண்பித்திருக்கிறார். நிருபர் கதாபாத்திரத்திற்கு அதர்வாவை தேர்வு செய்தது சிறப்பு. போலி சான்றிதழ்களை வைத்து வைத்து செய்யும் தில்லுமுல்லுகளை அழகாகவும் தைரியமாகவும் சொல்லியிருக்கிறார்.

டிரம்ஸ் சிவமணியின் இசை படத்திற்கு பெரும் பலம். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கணிதன்’ தேர்ச்சி.
மேலும் வாசிக்க…

நடிகை டாப்சியின் கையை பிடித்து இழுத்த சேலம் ரசிகை..போலீஸ் தடியடி

12:46 AM |
மாம்பழம் நகரமான சேலத்திற்கு வந்த வெள்ளாவி நடிகை டாப்சியை காண ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். கூட்டத்தில் நடிகை டாப்சியின் கையை பிடித்து  ரசிகை ஒருவர் இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் ஸ்வர்ணபுரியில், தனியார் நகை கடை திறப்பு விழாவுக்கு, ஆடுகளம் திரைப்பட நடிகை டாப்சி வந்திருந்தார். அவரை காண்பதற்காக, காலை முதலே, சாலையின் இருபுறமும் ரசிகர்கள் கூட்டம் வரிசை கட்டி நின்றது. கடை திறப்பு விழா முடித்து டாப்சி வெளியே வந்தபோது, அங்கு ரசிகர்களும், திருநங்கையர்களும் போட்டி போட்டு, டாப்சி அருகே நெருங்க முயன்றனர்.

கையை பிடித்த ரசிகை
கூட்டத்தில் ஒரு பெண், திடீரென டாப்சியின் கையை பிடித்து இழுத்தார். பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை தள்ளினர். அதையடுத்து, கூட்டத்தை கலைக்க போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.

நெரிசலில் சிக்கிய நடிகை
கூட்ட நெரிசலில் சிக்கிய டாப்சியை ஒருவழியாக போலீசார் மீட்டனர். அதன்பின், வேகமாக காரில் ஏறிய டாப்சி உடனடியாக தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றார்.

நடிகைகளை காண ஆவல்
சேலத்திற்கு வரும், முன்னணி நடிகைகளை பார்க்க, ஆளாய் பறக்கும் கூட்டமும், போலீசார் தடியடி நடத்தி கலைப்பதும் சகஜமாகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தனியார் ஜவுளிக் கடை திறப்பு விழாவுக்கு, நடிகை நயன்தாரா வந்திருந்தார்.

போலீஸ் தடியடி
நயன்தாராவைப் பார்ப்பதற்காக, ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் நின்றது. இதனால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களும் காயம்பட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்தது நினைவிருக்கலாம்.
மேலும் வாசிக்க…

விசாரணை மாதிரி ஒரு படத்தை பார்த்ததில்லை – டிவிட்டரில் ரஜினி புகழாரம்..!!

11:38 PM |
பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘அட்டகத்தி’ தினேஷ், ஆனந்தி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் விசாரணை. வெளியீட்டுக்கு முன்பே சர்வேதச அளவில் பல அங்கீகாரங்களை பெற்ற இப்படம் நாளை பிப்ரவரி 5-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை மணிரத்னம், கமல் ஹாசன், பிரியதர்ஷன் போன்ற பல ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தும் இணைந்துள்ளார். டிவிட்டரில் இப்படம் குறித்து பேசிய அவர், ” விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம்.வாழ்த்துக்கள் வெற்றிமாறன் – தனுஷ்” என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகர் தனுஷ்..!!

11:39 PM |
தமிழ், இந்தி திரையுலகைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் உருவாக இருக்கும் படத்தில் அறிமுகமாக இருக்கிறார் தனுஷ்.

'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் தனுஷ். 'காதல் கொண்டேன்', 'திருடா திருடி', 'ஆடுகளம்', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது நடிகனாக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

இந்தியில் 'ராஞ்சனா (Raanjhanaa)' படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அமிதாப் பச்சனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்' படத்தில் நடித்தார். தற்போது ஹாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ்.

பிரபல ப்ரெஞ்ச் நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard' திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். தனுஷூடன் இணைந்து ‎UmaThurman‬ மற்றும் ‎Alexandra Daddario‬ முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தை Marjane Satrapi என்ற இரான் மற்றும் ப்ரெஞ்ச் படங்களின் இயக்குநர் இயக்க இருக்கிறார். இப்படத்தில் தனுஷ் பாத்திரத்தின் காட்சிகள் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும், இத்தாலி, மொரோகோ மற்றும் ப்ரான்ஸ் நாடுகளில் இப்படம் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com