விஜய் – அமலாபால் பிரிய இந்த படம்தான் காரணமாம்..!!

1:47 AM |
நடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனுஷின் அடுத்த படத்திலும் அவர்தான் நாயகி என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் நடிக்க வந்ததால் அமலாபால் – விஜய் உறவில் விரிசல் விழுந்துவிட்டதாகவும் இது விவாகரத்தில் முடிய அதிக வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது. குறிப்பாக விஜய் எவ்வளவோ சொல்லியும் அம்மா கணக்கு படத்தில் அமலாபால் நடித்ததே இந்த பிரிவிற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஜய் என்றால் உத்வேகம் – அமலாபால் புகழாரம்..!!

12:27 AM |
நடிகை அமலாபால் விஜய்யுடன் தலைவா படத்திலும் மற்றும் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து பேசிய அவர், விஜய் என்றால் இன்ஸ்பிரேஷன் என கூறியுள்ளார்.

மேலும் தனுஷ் குறித்து ஒருவார்த்தையில் பதிலளித்த அமலாபால், அவர் ஒரு பன்முகத் திறமை கொண்டவர் என பாராட்டியுள்ளார்.

தனுஷ் தயாரிப்பில் இவர் நடித்துள்ள அம்மா கணக்கு படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
மேலும் வாசிக்க…

கிளாமராக நடிக்கத் தயாராகும் அமலாபால்..!!

2:57 AM |
இயக்குனர் விஜய்யைத் திருமணம் செய்த பின் அமலா பால் நடிப்பிலிருந்து விலகி விடுவார் என்றுதான் திரையுலகத்தினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் விலகாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
திருமணத்திற்குப் பின் அவர் சூர்யா ஜோடியாக பசங்க 2 படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் சூர்யாவின் மனைவியாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரம்தான் அது.

தமிழில் அடுத்து அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் மீண்டும் அம்மா கதாபாத்திரத்தில் அம்மா கணக்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கன்னடத்தில் சுதீப் இயக்கத்தில் ஹெப்புலி என்ற படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் மட்டுமே நடித்த அமலா பால் முதல் முறையாக கன்னடத்தில் நடிக்க உள்ளார். தெலுங்கில் ஏற்கெனவே இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்த அமலா பால் திருமணத்திற்குப் பின் எந்த தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.

தெலுங்கில் ஹீரோயின்கள் என்றாலே அவர்களை கிளாமராகக் காட்டுவதுதான் வழக்கம். அமலா பால் திருமணத்திற்குப் பிறகு அப்படி நடிப்பாரோ, மாட்டாரோ என்ற சந்தேகத்தில்தான் யாரும் அவரை அணுகாமல் இருந்திருக்கிறார்கள். டோலிவுட்டில் சிலர் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு கிளாமராக நடிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால், அதற்கு சம்பளத்தை அதிகம் தர வேண்டும் என்று அமலா பால் கேட்டதாகவும் டோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இது உண்மையா, பொய்யா என்று அமலா பால்தான் சொல்ல வேண்டும்.
மேலும் வாசிக்க…

அம்மாவானார் அமலாபால்..!!

11:18 PM |
ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘நில் பட்டே சன்னாட்டா’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அம்மா கணக்கு’ படத்தை நடிகர் தனுஷ் தனது உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை அமலாபால் ஒரு 13 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இதில் அவர்தான் நடிக்க வேண்டும் என தனுஷ் கேட்டுக்கொண்டதாகவும் அவரது விருப்பத்தை அமலாபால் நிறைவேற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதில் ரேவதி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிந்தியில் இப்படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இப்படத்தை இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com