சிம்புவுடன் தீடீர் நெருக்கம் காட்டி விஷாலை சீண்டிய வரலட்சுமி..!!

10:46 PM |
நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், தனது தந்தை சரத்குமாரிடம் விஷால் முறைப்பு காட்டியதால், அந்த காதலுக்கு வரலட்சுமி முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றி விழாவை, அப்படத்தின் நாயகன் சிம்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினர். இதில் த்ரிஷா, வரலட்சுமி, ரம்யா கிருஷ்ணன், ஏ.ஆர்.ரகுமான், படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, திரிஷா, சிம்பு, வரலட்சுமி ஆகியோர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்தனர். முக்கியமாக, சிம்புவும் வரலட்சுமியும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிம்புவும், வரலட்சுமியும் ‘போடா போடி’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

சிம்புவிற்கும், விஷாலுக்கு ஆகவே ஆகாது. விஷாலிடம் இருந்து வரலட்சுமி விலகிய நிலையில், சிம்புவிடம் அவர் நெருக்கம் காட்டி வருவது, விஷால்  தரப்பிற்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

அச்சம் என்பது மடமையடா - திரைவிமர்சனம்

12:12 AM |
சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி என்றாலே ஒருவித மேஜிக் கிரியேட் ஆகும். அப்படி ஒரு மேஜிக் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. அதன் பிறகு மீண்டும் சிம்பு-கௌதம்-ரகுமான் என கூட்டணி அமைத்த படம் தான் அச்சம் என்பது மடமையடா.

ஆனால், இந்த படம் வருவதற்கு பல தடைகளை கடந்துவிட்டது, கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்கு முன் தொடங்கிய படம். இத்தனை வருடம் கழித்து வரும் இந்த அச்சம் என்பது மடமையடா மேஜிக்கை கிரியேட் செய்ததா? பார்ப்போம்.

என்னா மேட்டரு..?

சிம்பு படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். கிட்டத்தட்ட விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் போல்.

சிம்பு தங்கையின் தோழியாக மஞ்சிமா, சிம்புவின் வீட்டிலேயே தங்கி படிக்கிறார், பிறகு சொல்லவா வேண்டும்? காதல், அரட்டை என ஜாலியாக செல்கிறது.

பிறகு சிம்பு ஒரு ரோட் ட்ரிப் செல்ல, அவருடன் மஞ்சிமாவும் செல்கிறார். ஜாலியாக இவர்கள் ட்ரிப் போக ஒரு லாரி இவர்கள் மீது மோத, சிம்புவின் வாழ்க்கையே தலைகீழாகிறது. பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக காட்டியிருக்கிறார் கௌதம் மேனன்.

படம் எப்படி இருக்குது..?

சிம்பு இஸ் ரியல் கம்பேக் என்று சொல்ல வேண்டும், ஆரம்பத்தில் விடிவி கார்த்திக் போல் கையை ஆட்டுவது, தலையை ஆட்டுவது என இருந்தாலும், பொறுப்பு என்று வந்தவுடன் அவரிடம் வரும் முதிர்ச்சி நடிப்பிலும் நன்றாக தெரிகிறது. இதே மாதிரி படங்களை தேர்ந்தெடுத்து நடிங்க சிம்பு என்று சொல்ல தோன்றுகின்றது.

மஞ்சிமா தமிழுக்கு புதுவரவு, அவரை வைத்து தான் கதையே நகர்கிறது, அதை அவரும் உணர்ந்து நடித்துள்ளார். இதை தவிர நம்மை மிகவும் கவருவது சதீஷ், மொட்டை போலிஸ் ஒருவர்.

கௌதம் படம் என்றாலே காதல், பிறகு ஆக்‌ஷன் என்பது தெரியும். ஆனால், நமக்கு ஆக்‌ஷன் என்ற ஐடியாவே இல்லாத போது நம்மை நோக்கி ஒரு குண்டு வந்தால் என்ன செய்வோம்? என்பதை இரண்டாம் பாதியில் பதட்ட பட வைத்துள்ளார். கொஞ்சம் அவருடைய கமர்ஷியல் எல்லையை மீறியுள்ளார். குறிப்பாக சிம்புவின் பெயரை கிளைமேக்ஸில் சொல்லும் காட்சி தியேட்டரே அதிர்கிறது.

சட்டை காலருக்கும், முடிக்கும் இடையில என்னமோ பண்ணுதுன்ற காதல் வசனமாக இருந்தாலும் சரி, லைஃபில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதுக்கு நம்ம ரெடியா இருக்கோமான்னு தான் கேள்வி என்ற உணர்ச்சிப்பூர்வமான வசனமும் சரி கௌதம் சூப்பர்.

படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர். ரகுமான். பாடல்களிலும் சரி, பின்னணியிலும் சரி செம்ம ஸ்கோர் செய்துவிட்டார். ஒளிப்பதிவு நாமே ஒரு ட்ரிப் சென்ற அனுபவம்.

விசில்

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுப்பாக செல்கின்றது.

சிம்பு-மஞ்சிமா காதல் காட்சிகள்.

கௌதம் படத்தில் இதுவரை இல்லாத கமர்ஷியல் அம்சம், குறிப்பாக கிளைமேக்ஸ்

முதல் பாதியிலேயே அனைத்து பாடல்களும் வருவது ஒரு தரப்பு ஆடியன்ஸிற்கு சலிப்பை ஏற்படுத்தலாம், மேலும், சிம்பு கால்ஷிட் பிரச்சனையா தெரியவில்லை, பர்ஸ்ட் ஆபில் உடல்வாகு மாறி மாறி வருகின்றது.

சில லாஜிக் மீறல்கள், வழியில் பார்த்தவுடன் சாவி இருக்கா, இல்லையா என்று தெரியவில்லை பைக், கால் டாக்ஸி என சிம்பு எடுத்து ஓட்ட ஆரம்பித்து விடுகிறார்.

மொத்தத்தில்  கௌதம் மேனன் ரசிகர்களையும் தாண்டி, மேலும் சிலரையும் இந்த ட்ரிப் ரசிக்க வைக்கும்.
மேலும் வாசிக்க…

யூ டியூப் ராஜாவான சிம்பு..!!

1:09 AM |
நடிகர் சிம்புவின் ரசிகர் பலம் நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் படங்கள் வெளிவராத காலங்களிலும் அவருக்கு பக்க பலமாக இருந்து அவரது ஸ்டார் அந்தஸ்துக்கு எந்தவித பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொண்டார்கள் அவரது ரசிகர்கள்.

அப்படி இருக்கும்போது தற்போது வாரம் ஒருமுறை அவர் படங்களின் பாடல்களோ அல்லது டிரைலர் காட்சிகளோ வெளியானால் சும்மாவா விடுவார்கள்.

அந்தவகையில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருக்கும் இது நம்ம ஆளு பட பாடல்கள், அச்சம் என்பது மடமையடா டிரைலர், தள்ளிப் போகாதே சிங்கிள் பாடல், தள்ளி போகாதே சிம்பு கவர் என பல வீடியோக்களை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுகளித்து தற்போது அவரை யூ டியூப் ராஜாவாக்கி உள்ளனர்.
மேலும் வாசிக்க…

காயங்களுடன் மருத்துவமனையில் சிம்பு..!!

10:40 PM |
சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இப்படத்திற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அமைந்த இந்த சண்டைக் காட்சியின் போது, சிம்புவிற்கு மூக்கு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

சிம்புவுக்கு அடிப்பட்ட விஷயம் தெரிந்தவுடன் சிம்புவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர். ‘வாலு’ படத்திற்குப் பிறகு சிம்புவின் ரசிகர்கள் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு இப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலான ‘தள்ளி போகாதே…’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் வாசிக்க…

சிம்பு பட டிரைலர் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை..!!

11:40 PM |
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த டிரைலர் யூ டியூபில் 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

மேலும் இந்த டிரைலர் 20000-க்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக பீப் பாடல் விவகாரத்தால் மிகுந்த மன வேதனையில் இருந்த நடிகர் சிம்புவுக்கு இந்த வரவேற்பு ஆறுதலாக அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com