மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இப்போது தான் அதில் இருந்து மீண்டு வந்துள்ளார் கௌதமி. கமல்ஹாசனும் கீழே விழுந்து காலில் அடிப்பட்டு இப்போது தான் நீண்ட ஓய்விற்கு பிறகு சரியாகி வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் பிரிவு குறித்து செய்தி வெளியிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
இதற்கு முன் ஒரு பேட்டியில் கமல்ஹாசன், கௌதமி பற்றி பேசும்போது, அவர்களுக்கு எது ஆறுதல் தருகிறதோ அதுவே எனக்கு போதும். என்னுடைய உணர்வுகள் முக்கியமில்லை.
அவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு எப்போதுமே நான் துணையாக இருப்பேன்.
ஸ்ருதி, அக்ஷாரா, சுப்புலக்ஷ்மி என மூன்று பெண் குழந்தைகளுடன் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
அக்ஷாரா
,
கமல்ஹாசன்
,
கௌதமி
,
சினிமா
,
சுப்புலக்ஷ்மி
,
மார்பக புற்றுநோய்
,
ஸ்ருதி