ஊரான் ரெண்டு பட்டால் மட்டுமல்ல... கூத்தாடிகளே ரெண்டு பட்டாலும் கூத்தாடிகளுக்குத்தான் கொண்டாட்டம். ஒரு ஜோடி பிரிந்தால் இருவரையுமே உசுப்பேற்றிவிட்டு அதில் குளிர் காய்வார்கள்.
அப்படி சமீபத்தில் பிரிந்த மில்க் நடிகையை சிலர் பயன்படுத்துகிறார்கள். இடையில் சிலகாலம் மணவாழ்வில் கூண்டுக்குள் சிக்கிய கிளியாக தவித்தவர் இப்போது சுதந்திரக் காற்றை ரொம்பவே சுவாசிக்கிறார்.
'வாழ்க்கைன்னா என்னன்னு உங்க கணவருக்குக் காட்டுங்க.. அவரை வெறுப்பேத்தற மாதிரி பார்ட்டிகளுக்கு அடிக்கடி வாங்க... கிளாமரா நடிங்க...' என்று தவறான பாதைக்கு கூட்டிச் செல்கிறார்கள்.
நடிகையும் அவர்களை ரொம்பவே நம்புகிறாராம். சமீபத்தில் கூட கிளாமராக ஒரு ஃபோட்டோஷூட் எடுத்து மீடியாக்களுக்கு சூடாக அனுப்பியிருக்கிறார்.
Tags:
Cinema
,
கூத்தாடிகள்
,
சினிமா
,
டைவர்ஸ்
,
போட்டோஷூட்
,
மில்க் நடிகை