கரண் ஜோஹார் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது.
இந்நிலையில் படம் சென்சார் போர்டுக்கு சென்றது.
ஏ தில் ஹை முஷ்கில் படத்தை பார்த்த சென்சார் ரன்பிர், ஐஸ்வர்யா ராய் இடையேயான நெருக்கமான காட்சிகள் சிலவற்றை கத்தரி போட்டுள்ளது. இதனால் கரண் ஜோஹார் வருத்தத்தில் உள்ளார்.
ரன்பிர், ஐஸ்வர்யா ராய் இடையேயான நெருக்கமான காட்சிகள் படத்தின் ஓட்டத்திற்கு மிகவும் முக்கியம் என கரண் ஜோஹார் எவ்வளவோ கூறியும் அதை சென்சார் போர்டு கேட்கவில்லை
சென்சார் போர்டு அடம் பிடித்ததால் வேறு வழியில்லாமல் 3 நெருக்கமான காட்சிகளை நீக்கியுள்ளார் கரண். அப்படி இருந்தும் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தான் கிடைத்துள்ளது. படத்தில் சில நெருக்கமான காட்சிகள் குழந்தைகள் பார்க்க ஏதுவாக இல்லை என்பதால் இந்த சான்றிதழாம்.
ஐஸ்வர்யா ராய் விரும்பிக் கேட்டு ரன்பிர் கபூருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தார். அந்த காட்சிகளை நீக்குமாறு அமிதாப் பச்சன் கூறியும் கரண் கேட்கவில்லை. இந்நிலையில் தான் சென்சார் போர்டு அந்த காட்சிகளை கத்தரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அமிதாப் பச்சன் தான் தணிக்கை குழிவில் உள்ள நண்பர்களை வைத்து அந்த காட்சிகளை வம்படியாக கத்தரிக்க சொல்லி இருக்கிறார் என கிசுகிசுகப்டுகிறது.
Tags:
Cinema
,
அனுஷ்கா சர்மா
,
ஐஸ்வர்யா ராய்
,
சினிமா
,
படுக்கையறை காட்சி
,
ரன்பிர் கபூர்