பிரகாசமான நடிகர் ஒருவர் தனது அடுத்தடுத்த படங்களில் கயல் மீன் நடிகையை தனது ஹீரோயினாக ஆக்கிக் கொண்டே வருகிறார். இவருடன் இதுவரை இரண்டு படங்களில் நடித்துவிட்ட கயல் மீன் நடிகை, அடுத்து நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது காதல் மனைவிக்கு தெரியாமல் பிரகாஷமான நடிகர், சென்னையில் ஈசிஆரில் சொகுசு பங்களா ஒன்றை பிரம்மாண்டமாக கட்டி வருகிறாராம். மிகவும் விலையுயர்ந்த பொருட்களாலேயே அந்த வீட்டை அலங்கரித்து வருகிறாராம். காதல் மனைவிக்கு தெரியாமல் இந்த வீட்டை நடிகர் கட்டி வருவதன் ரகசியம் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.
அது என்னவென்றால், இந்த வீடு தனது காதல் மனைவிக்கு அன்பு பரிசாக கொடுக்கப்போவதில்லையாம். மாறாக தன்னுடன் மூன்று படங்களில் ஜோடி போட்ட கயல் மீனுக்காகத்தான் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது. காதல் மனைவிக்கு தெரியாமல் நடிகர், கயல் மீன் நடிகைக்கு சொகுசு பங்களா கட்டுவதன் மர்மம் என்ன? என்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
Tags:
Cinema
,
கயல்
,
கயல் மீன்
,
சினிமா
,
சொகுசு பங்களா
,
நடிகர்
,
பிரகாஷமான நடிகர்