பாலா என்ற ஒருவயது குழந்தையின் எலும்பு மாற்று சிகிச்சைக்காக நடிகர் விஜய் ரூ.2 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
இந்த குழந்தைக்கு
Bone Marrow Transplantation Operation செய்ய வேண்டுமாம். இதற்காக ரூ 20 லட்சம் தேவைப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு உதவுமாறு கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் முகவரியுடன் தகவல்கள் பகிரப்பட்டன.
Help Baby Bala என்ற ஹேஷ்டேக் போட்டு அந்தக் குழந்தையும் படத்துடன் தகவல் பகிரப்பட்டது.
இந்தத் தகவலை அறிந்த நடிகர் விஜய், உடனடியாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தனது விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் மூலமாக மருத்துவமனைக்கு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் 1 லட்ச ரூபாய் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பார்த்துவிட்டு, பலர் தங்களால் இயன்ற தொகையை அனுப்பியுள்ளனர். இதுவரை 4 லட்ச ரூபாய் சேர்ந்துள்ளதாம்.
இந்தக் குழந்தை பற்றிய முழுமையான விவரங்கள் அறிய
https://www.facebook.com/helpbabybala என்ற ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்க்கவும்.
Tags:
Cinema
,
எலும்பு மாற்று
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
விஜய்