இந்த 3 பேரில் யார் அம்மா? கண்டுபிடிக்க முடிகிறதா மக்களே..!!
இண்டியானாபோலிசை சேர்ந்தவர் கய்லான் மாஹோம்ஸ் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அம்மா, இரட்டை சகோதரி மற்றும் நான் ('Mom, twin & me'.). என ஒரு போட்டோவை போட்டு கடந்த 28 ந்தேதி பதிவிட்டு இருந்தார். தற்போது இந்த போட்டோ இணையதளங்களில் ,வைரலாகி உள்ளது.
இந்த பதிவிற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட லைக்குகள் கிடைத்துள்ளது. 19 ஆயிரத்திற்கும் அதிகமாக ஷேர் ஆகி உள்ளது. இந்த பதிவிட்ட புகைபடத்தில் உள்ள 3 பேரும் ஒன்றுபோல் உள்ளனர். 3 பேரும் இளமையாக உள்ளர். இதில் கய்லான் தாயார் யார் என கண்டுபிடிப்பது மிகவும் கடினம்
இதற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். இதற்காக #BlackGirlMagic என ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு உள்ளது.
கய்லான் தாயார் டினா புரவுன் இடது பக்கம் உள்ளார் தொடர்ந்து இரட்டை சகோதரிகளில் கய்லா அடுத்து கய்லான் உள்ளார்.