சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் ஷ்யாம் கணேஷின் இளைய மகள் ரஷா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
ரஜினிமுருகன் படத்திற்குப் பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ரெமோ. அட்லீயின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரெமோவில் 'தெறி' விஜய் பாணியை சிவகார்த்திகேயன் பின்பற்றுவதாக கூறுகின்றனர். விஜய் தற்போது நடித்து முடித்திருக்கும் தெறி படத்தில் மீனாவின் மகள் நைநிகா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
அதேபோல இப்படத்தில் நடிகர் ஷ்யாம் கணேஷின் இளைய மகள் ரஷா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரஷாவும் கலந்து கொண்டிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷின் கைகளில் இருக்கும் ரஷா, சிவகார்த்திகேயனுக்கு கேக் ஊட்டுவதைப் பார்க்கும் போது ரெமோவில் இருவரின் மகளாகவும் ரஷா நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை.
ஏற்கனவே ரஷாவின் சகோதரி நிவாசினி கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்து புகழ்பெற்றவர் என்பதால், ரஷாவும் அவரைப்போல கலக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது.
Tags:
Cinema
,
கீர்த்தி சுரேஷ்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
தெறி
,
நைநிகா
,
மீனா