பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடிப்பில் உருவாகிவரும் தோழா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குனர் அட்லீ, ” ஒரு படத்தின் போஸ்ட் புரொடக்ஷனும் முதல் இரவும் ஒன்று. முதல் இரவில் நமக்கு பதில் வேறு யார் இருந்தாலும் குழந்தை வேற மாதிரி வந்துவிடும்.
அதேபோல் போஸ்ட் புரொடக்ஷனில் நமக்கு பதில் வேறு யாராவது சென்றால் படம் வேறு மாதிரி வந்துவிடும். அப்படி இருந்தும் தெறி போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விட்டுவிட்டு நான் இங்கு வந்ததற்கு பிவிபி மீது எனக்கு இருக்கும் நட்பு தான் காரணம்” என்றார்.
Tags:
Cinema
,
அட்லீ
,
கார்த்தி
,
சினிமா
,
தமன்னா
,
தெறி
,
நாகர்ஜுனா