நடிகர் ஷாருக்கான் டெல்லியில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்த அவர் 1988-ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனால் பட்டம் பெறாமல் விட்டு விட்டார்.
இந்தநிலையில் தனது பேன் படத்தின் பாடல் வெளியீட்டுக்காக டெல்லி சென்ற அவர், தான் படித்த ஹன்ஸ்ராஜ் கல்லூரிக்கு நேற்று சென்றார். அங்கு, தனது பி.ஏ. பட்டத்தை கல்லூரி முதல்வர் ராமா சர்மாவிடம் இருந்து பெற்றார்.
இதுகுறித்து ஷாருக்கான் கூறுகையில், 1988-ம் ஆண்டு கல்லூரியை விட்டு வெளியேறிய நான் திரும்பவும் வந்திருக்கிறேன்.
நான் இப்போது தவற விட்டது, என் குழந்தைகளைத்தான். நான் அவர்களுக்கு எனது கல்லூரியின் ஒவ்வொரு மூலையையும் காட்ட விரும்பினேன். ஆனால் அவர்கள் இப்போது என்னுடன் வரவில்லை என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இது எனக்கு ஒரு சிறப்பான தருணம் என்றார்.
Tags:
Cinema
,
சினிமா
,
டெல்லி
,
ராமா சர்மா
,
ஷாருக்கான்
,
ஹன்ஸ்ராஜ்