உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
குமரிமுத்து 500க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். வித்தியாசமான சிரிப்பினால் மக்களை சிரிப்பூட்டி பிரபல்யமானவர்.ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர் 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.
முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
தீவிர தி.மு.க., பேச்சாளராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜனி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Tags:
Cinema
,
அஜித்
,
இது நம்ம ஆளு
,
கமல்
,
குமரிமுத்து
,
சினிமா
,
ரஜனி
,
விஜய்