கமல் இயக்கிய படங்களில் ‘ஹேராம்’படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. இந்தப்படம் வெளியாகி இப்போது சரியாக பதினாறு ஆண்டு காலம் ஓடிவிட்டது. இதில் கமல் தவிர ஷாருக் கான், அதுல் குல்கர்னி, வசுந்தரா தாஸ், ராணி முகர்ஜி என தென்னிந்திய மற்றும் வட இந்திய பிரபலங்கள் சம அளவில் நடித்திருந்தனர் என்று சொல்லலாம். இந்தப்படத்தில் ஸ்ரீராம் அபயங்கர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அதுல் குல்கர்னிக்கு சிறந்த துணை நடிகர் கதாபாத்திரத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.
தற்போது பதினாறு வருடம் கழித்து இந்தப்படத்தில் அதுல் குல்கர்னி நடித்ததன் ரகசியத்தை உடைத்துள்ளார் கமல். அதாவது இந்த அபயங்கர் பாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வானவர் பிரபல வட இந்திய நடிகரான மோகன் கோகலே தான். படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மோகன் கோகலே மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அதன்பின் அந்த கதாபாத்திரத்திற்காக அழைக்கப்பட்டவர் தான் அது குல்கர்னி. படத்தில் நடித்ததோடு தேசிய விருதையும் பெற்றுவிட்டார் என கமல் கூறியுள்ளார்.
ஹேராம் படத்தில் தாமதமாக வந்து உள்ளே நுழைந்தாலும், அதன்மூலம் இரண்டு விஷயங்களை அதுல் குல்கர்னி சம்பாதித்துக்கொண்டார். ஒன்று தேசியவிருது, இன்னொன்று தமிழ்சினிமாவில் முக்கியமான அங்கீகாரம்.
Tags:
Cinema
,
கமல்
,
சினிமா
,
வசுந்தரா
,
ஷாருக் கான்
,
ஹேராம்