பீப் பாடல் விவகாரத்தால் நொந்து போயிருந்த சிம்பு தற்போது அச்சம் என்பது மடமையடா டிரெய்லர் மூலம் மீண்டு வந்திருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இன்று காலை சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் டிரெய்லர் வெளியானது.விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பின் இருவரும் இணையும் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அச்சம் என்பது மடமையடா டிரெய்லர் சிம்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
காதல், ஆக்ஷன் என்று விண்ணைத்தாண்டி வருவாயா பாணியில் இருந்தாலும் கவுதம் மேனன், தாமரை, ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் இணைந்துள்ளதால் இந்தப் படமும் ஒரு பிளாக்பஸ்டராக மாறும் என்று கூறுகின்றனர்.புத்தாண்டை முன்னிட்டு சிம்பு தனது ரசிகர்களுக்கு அளித்திருக்கும் இந்த டிரெய்லர் சிம்புவை மீண்டும் மீட்டுக் கொண்டு வந்ததாக அவரது ரசிகர்கள் #strisback என்னும் ஹெஷ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
வெளியான குறைந்த நேரத்தில் 1 லட்சம் பார்வைகளையும், 6 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் அச்சம் என்பது மடமையடா டிரெய்லர் பெற்றிருக்கிறது.மொத்தத்தில் இந்த புத்தாண்டு சிம்புவிற்கு திருப்புமுனையாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:
Cinema
,
சிம்பு
,
சிம்புவை மீட்டது அச்சம் என்பது மடைமையடா
,
சினிமா