ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு மாரீசன் என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் ‘ஓகே கண்மணி’ புகழ் நித்யா மேனனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
முன்னதாக சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படத்துக்கு மாரீசன் எனும் தலைப்புதான் பரிசீலனையில் இருந்தது. பின்னரே புலி தலைப்பு இறுதிசெய்யப்பட்டது. புலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ் தான் தற்போது மாரீசன் படத்துக்கும் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
சினிமா
,
விக்ரம்
,
விஜய்
,
விஜய் டைட்டிலை கைப்பற்றிய விக்ரம்