ஆபாச பாடல் பாடிய குற்றச்சாட்டில் பொலிஸிடம் நடிகர் சிம்பு சரண் அடைகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனிருத் ஆஜராவாரா என்பது கேள்விகுறியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாச பாடல் பாடியதாக சிம்பு, இசை அமைத்த அனிருத் இருவருக்கும் எதிராக பெண்கள் அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
கோவை பொலிஸில் மகளிர் அமைப்பினர் முறைப்பாடு அளித்துள்ளனர். அதன்பேரில் சிம்பு, அனிருத் இருவரும் வரும் 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதுபற்றி சிம்பு கூறும்போது,‘நான் தமிழ்நாட்டை விட்டு எங்கேயும் ஓடிவிடவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. பிறகு ஏன் பயப்பட வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யட்டும். அதற்கு தலைவணங்குகிறேன்.
சட்டப்படி கைதானால் சிறை செல்ல தயார்’ என்றார். மேலும் 19ம் திகதியன்று அவர் பொலிஸில் சரண் அடைகிறார் என்றும் அவரது தரப்பில் கூறப்படுகிறது.
அனிருத் இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருந்தார். அவர் நேற்றே சென்னை திரும்புவதாக இருந்தது. அவர் சென்னை வந்துவிட்டார் என்று ஒரு தரப்பும், இன்னும் வரவில்லை என்று ஒரு தரப்பும் கூறுகிறது.
இதற்கிடையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டை பூட்டிவிட்டு வேறு இடத்துக்கு சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
குறிப்பிட்ட பாடலுக்கு தான் இசை அமைக்கவில்லை என்று கனடாவில் இருந்தபடியே அனிருத் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் தரப்பில் வழக்கறிஞர் பொலிஸ் விசாரணையின்போது ஆஜராவார் என்று தெரிகிறது.
Tags:
Cinema
,
அனிருத்
,
சிம்பு
,
சிம்பு சரணடைகிறார்
,
சினிமா