என்னை அறிந்தால் படத்தில் நடித்தவர் பார்வதி நாயர், அதன்பிறகு உத்தமவில்லன் படத்தில் நடித்தார். தற்போது எங்கிட்ட மோதாதே படத்தில் நட்ராஜ் ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர இவர் நடித்த வாஸ்கோடகாமா என்ற கன்னட படம் சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் ஒரு படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
பார்வதி நாயர், அஜித்தின் மிகப்பெரிய ரசிகை. இதை கேள்விபட்டுத்தான் கவுதம்மேனன், என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நடிக்க வைத்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது பார்வதி நாயர், தன் ரசிகை என்பதை அறிந்த அஜித், அவரை அழகாக புகைப்படம் எடுத்து அதை பிரேம் செய்து அன்பழிப்பாக வழங்கினார். இதனால் நெகிழ்ந்துபோன பார்வதி நாயர் பதிலுக்கு அஜித்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
அடிப்படையில் ஓவியரான பார்வதி நாயர் தற்போது அஜித்தை பிரமாண்ட
ஓவியமாக வரைந்து வருகிறார். அதனை விரைவில் அஜித்தை சந்தித்து கொடுக்க இருக்கிறார். இந்த ஓவியம் இதுவரை அஜித்தை பார்க்காத ஒரு கோணத்தில் சித்தரிப்பதாக இருக்குமாம்.
Tags:
Cinema
,
அஜித்
,
அஜித்தை ஓவியம் வரைகிறார் பார்வதி நாயர்
,
சினிமா