என் உடல்வாகுக்கு ஏற்பதான் எனக்கு ரோல் கொடுப்பார்கள். அதனால் நான் நம்புவது குத்தாட்டத்தைதான். தமிழ் படங்கள் பார்ப்பீர்களா? தமிழில் எந்த ஹீரோவுடன் நடிக்க விருப்பம்? தனிப்பட்டு ஒருவரை மட்டும் சொல்ல முடியாது. அஜீத், விஜய், சூர்யா, இப்போ… அதர்வா! அதற்கப்புறம் அனிருத்தை ரொம்ப பிடிக்கும்.
அவர் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது தோற்றம், உடல்வாகு, சில ஆல்பங்களில் அவரது பிரசன்டேஷன்… ரியலி ஹீ இஸ் வெரி நைஸ் & ஹீ இஸ் மை சாய்ஸ்.உங்க முதல் படமான ‘சாய்ந்தாடு’ பற்றி? மெடிக்கல் கிரைம் கதை. சில காட்சிகளைக் கண்டேன். சூப்பர். கிராஃபிக்ஸ் நிறைய இருக்கு. ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் ட்ரீட்தான்.
‘சாய்ந்தாடு’ படத்தில் ஆதர்ஸ் & அனு கிருஷ்ணா நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சுப்பு பஞ்சு, மனீஷாவோடு ரிமாலா பல்லன் என்ற மலேசிய பெண்மணி, கிரேன் மனோகர், காதல் சுகுமார், பாவா லக்ஷ்மணன், அல்வா வாசு, நெல்லைசிவா, கிங்காங் மற்றும் ஆங்கிலேயர்கள் & ஆப்பிரிக்கர்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.
Tags:
Cinema
,
அனிருத்
,
அனிருத் தான் என் மானசீக ஹீரோ
,
சினிமா