ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் உருவான 'பூலோகம்' திரைப்படம் பலவித சோதனைகளை கடந்த வரும் 24ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு மேலும் ஒரு எதிர்பாராத பரிசு கிடைத்துள்ளது.
அதுதான் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை. பலவிதமான ஃபைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி நீண்ட போராட்டத்திற்கு பின்னர் விடுதலை பெற்றுள்ள இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% கேளிக்கை வரிவிலக்கு என்பது மிகப்பெரிய பரிசாக கருதப்படுகிறது.
'பூலோகம்' படத்திற்கு வரிவிலக்கு கிடைத்துள்ளதால் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட விடுமுறை மற்றும் வரிவிலக்கு ஆகிய சாதகமான சூழ்நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆவதால் படக்குழுவினர் அனைவரும் நம்பிக்கையுடன் வரப்போகும் வெற்றியை எதிர்நோக்கி உள்ளனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
த்ரிஷா
,
பூலோகம் படத்துக்கு கிடைத்த பெரிய பரிசு
,
ஜெயம் ரவி