அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தெறி. விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சில வாரங்களாக முடங்கிப்போனது. தற்பொழுது திட்டமிட்ட படி படத்தின் சண்டைகாட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றது.
ஒரு பெரிய தொழிற்சாலை செட்டில், ‘தெறி’ படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகின்றது. இரண்டு நாட்களாக விஜயின் விடாது சண்டையை ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் கலோயன் வோடோனிசரோவ் அனல்பறக்க படமாக்கிக் கொண்டிருக்கிறாராம். எனவே தெறி படத்தில் விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.
Tags:
2 நாட்களாக விஜய்யின் விடாது சண்டை
,
Cinema
,
சினிமா
,
விஜய்