ரஜனியின் முக்கிய அறிவிப்பொன்று அடுத்த மாதம் 12 ஆம் திகதி வெளியாகவுள்ளது.ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள எந்திரன் 2 படத்திற்காக ரஜினிகாந்திற்கு எப்படிப்பட்ட தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது குறித்து அமெரிக்காவில் விவாதித்து வருகிறார்கள்.
அதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்தும் கடந்த வாரம் அமெரிக்க சென்றார். ஹொலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் ஷங்கர், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியத் திரையுலகில் இதுவரை வெளிவராத அளவிற்கு இந்தப் படத்தை உருவாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு இன்னும் பத்து நாட்கள் இருப்பதால் அதற்குள் எந்திரன் 2 படத்தில் ரஜினிகாந்த் எப்படி இருக்கப் போகிறார் என்பதை முடிவு செய்து விடுவார்களாம். அதற்கான தோற்ற மாதிரியை உருவாக்கி ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் திகதியன்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம். ஜனவரி மாதத்தில் எந்திரன் 2 படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும் என்கிறார்கள்.
ஒரு வருட காலத்திற்கு படப்பிடிப்பு நடந்து 2017ம் ஆண்டு பொங்கலுக்கோ, கோடை விடுமுறைக்கோ படம் வெளிவரும் என்கிறார்கள். ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் c படப்பிடிப்பு இந்த மாதத்திற்குள் முடிவடையவும் வாய்ப்புள்ளதாம். அதன் பின் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்ததும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிடவும் முயற்சிகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.
கபாலி, முதல் பார்வை வெளியான போதே பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அப்படியிருக்க ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் ஆம் திகதியன்று எந்திரன் 2 படத்தின் முதல் பார்வை வெளிவந்தால் அது அவருடைய ரசிகர்களுக்கு மிகப் பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.
Tags:
Cinema
,
கபாலி
,
சினிமா
,
ரஜினி
,
ரஜினியின் பிறந்த நாளன்று முக்கிய அறிவிப்பு