பீப் பாடல் சர்ச்சையில் சிவ கார்த்திகேயனை இழுக்காதீர் என சிம்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்புகளும், மகளிர் சங்கங்களும் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கோவை போலீசார் இருவருக்கும் 2 வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் சென்னை போலீசாரும் இந்த வழக்கில் தீவிரம் காட்டி வருகின்றனர். தான் இந்தப் பாடலை இணையத்தில் வெளியிடவில்லை என்று சிம்பு கூறியுள்ள நிலையில் இந்தப் பாடலை இணையத்தில் வெளியிட்டது யார்? என்று யூடியூப் நிறுவனத்திடம் சைபர்கிரைம் போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர். இந்த கடிதத்திற்கு பதில் வந்தால்தான் இணையத்தில் லீக் செய்தது யார்? என்பது தெரியவரும்.
இந்நிலையில் பீப் சாங்கை சிவகார்த்திகேயன் தான் லீக் செய்ததாக இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக வதந்தி ஒன்று பரவி வருகிறது. இதையடுத்து சிம்புவின் அட்மின் கையாளும் டுவிட்டரில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், பீப் பாடல் லீக் விவகாரத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஒருசிலர் தேவையில்லாமல் அவரது பெயரை இந்த விஷயத்தில் வேண்டுமென்றே இழுப்பதாகவும் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் பீப்’ பாடல் விவகாரத்தை சட்டபூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். அவர் என்னை பார்த்துக்கொள்வார் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
சிம்பு
,
சினிமா
,
பீப் பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயன்