லிங்கா, ருத்ரம்மா தேவி, இஞ்சி இடுப்பழகி படங்களின் அடுத்தடுத்து தோல்வி அனுஷ்காவை மனதளவில் தடுமாற வைத்து விட்டதாம். இதில் லிங்கா ரஜினி படம் என்றாகி விட்டது. ஆனால் மற்ற இரண்டு படங்களும் தன்னை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டவை என்பதால், தான் நடித்திருப்பதை நம்பி படத்தை வாங்கியவர்கள் நஷ்டப்பட்டதை நினைத்து ரொம்பவே பீல் பண்ணினாராம் அனுஷ்கா.
அதேசமயம், ராஜமவுலியின் பாகுபலி வெற்றி மட்டுமே அனுஷ்காவுக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது. அதனால் அடுத்தபடியாக பாகுபலி-2 படமும் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையோடு களமிறங்கியிருக்கிறார் அனுஷ்கா.
மேலும், சிங்கம், சிங்கம்-2 படங்களைத் தொடர்ந்து அடுத்து சிங்கம்-3 படத்திற்காகவும் சூர்யாவுடன் நடிக்கிறார். இந்த படத்தில் இல்லத்தரசியாக நடிக்கும் அனுஷ்கா, இந்த இரண்டு படங்களும் கண்டிப்பாக ஹிட்டாகி விடும் என்று பாசிட்டீவாக பேசி வருகிறார். அதோடு, இதற்கு முன்பு பெரிதாக ராசி பலன், நல்ல நேரம், கெட்ட நேரம் என்று பார்த்து செயல்படாத அனுஷ்கா, இப்போது நல்ல நேரம் பார்த்துதான் ஒவ்வொரு விசயத்தையும் தொடங்குகிறாராம்.
அதாவது, தினமும் வீட்டில் இருந்து ஸ்பாட்டுக்கு கிளம்பும்போது நல்ல நேரம் பார்ப்பவர், முதல்நாள் கேமரா முன்பு வரும்போது சரியான நேரம் பார்த்துதான் கேமரா கண்களுக்கு காட்சி கொடுக்கிறாராம். இதற்கு முன்பு இதுபோன்ற விசயங்களில் பெரிதாக நம்பிக்கை வைக்காமல் இருந்து வந்த அனுஷ்காவுக்கு சமீபகாலமாக சில படங்கள் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டதால் இப்படி நேரம் காலத்தை பார்த்து செயல்படத் தொடங்கியிருக்கிறாராம்.
Tags:
Cinema
,
அனுஷ்கா
,
சினிமா
,
நல்ல நேரம் பார்க்கும் அனுஷ்கா