சிம்பு- அனிருத் பாடிய பீப் பாடல் விவகாரம் தற்போது நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருக்கிறது. பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் சிம்பு மற்றும் அனிருத் மீது தகவல் தொழில் நுட்ப முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் கனடாவில் நடந்த இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த அனிருத் மற்றும் அவரது குழுவினர், இசை நிகழ்ச்சி முடிவடைந்து கடந்த வாரம் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது குழுவினர் மட்டுமே சென்னை திரும்பினர். பீப் பாடல் ஏற்படுத்தியுள்ள சர்ச்சையால் கைது நடவடிக்கைக்கு பயந்து அனிருத் நாடு திரும்பாமல் கனடாவிலேயே தங்கிவிட்டார்.
இந்நிலையில் நேற்று இசையமைப்பாளர் அனிருத் கனடாவில் இருந்து இந்தியா திரும்பிவிட்டதாகவும், புதன் கிழமை அதிகாலை அவர் இந்தியாவை வந்தடைவார் என்றும் அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:
Cinema
,
அனிருத்
,
சிம்பு
,
சினிமா
,
ரகசியமாக நாடு திரும்பினார் அனிருத்