தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களான ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் லிங்குசாமி ஆகியோர் தற்போது மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளனர். இதனால் இவர்களது படங்களை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஒரு சமயத்தில் தமிழில் கொடிகட்டிப் பறந்தவர் தான் ஏ.எம்.ரத்னம்.
பின்னர் தனது மகன்களை வைத்து இவர் தயாரித்த ஒருசில படங்களும் முதல்வன் ஹிந்தி ரீமேக்கும் மாபெரும் தோல்வியடைந்தது. இந்த படங்களை எல்லாம் இவர் மாபெரும் பட்ஜெட்டில் எடுத்திருந்தார். இதன் விளைவாக ஒருசில ஆண்டுகள் இவர் இண்டஸ்ட்ரியை விட்டே ஒதுங்கியிருந்தார்.
அந்த சமயத்தில்தான் அஜித்தின் ஆரம்பம் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்பின் என்னை அறிந்தால், வேதாளம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து வெற்றி படங்களாக கொடுத்து தற்போது இவர் மீண்டும் முன்னணி இடத்துக்கு வந்துள்ளார்.
அஜித் வாயிலாக இவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எந்த ரூபத்திலாவது ஆஸ்கர் ரவிச்சந்திரன் மற்றும் லிங்குசாமி ஆகியோருக்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏ.எம்.ரத்னத்தை போல அவர்களும் மீண்டு வரவேண்டும் என்பதே திரையுலகினரின் விருப்பம்.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
தத்தளித்த ஏ.எம்.ரத்னத்தை கரையேற்றிய அஜித்