உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கேட்ட கேள்விகளுக்கு அவர் சுவாரசியமாக பதிலளித்தார்.
தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ருதிஹாசன், 'தனக்கு வரபோகும் கணவர் உண்மையானவராகவும், நல்ல குணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று கூறிய ஸ்ருதி தனது வருங்கால கணவருக்கு கண்டிப்பாக முகத்தில் தாடி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் அஜீத், விஜய், சூர்யா குறித்து கூறிய ஸ்ருதிஹாசன் அஜீத்தை ஹேண்ட்சம் ஸ்டார் என்றும், விஜய்யை ஹாட் ஸ்டார் என்றும், சூர்யாவை ரொமாண்டிக் ஸ்டார் என்றும் குறிப்பிட்டார். மேலும் தந்தை கமல்ஹாசனுடனும், தங்கை அக்ஷராவுடனும் நடிக்க எப்பொழுது வேண்டுமானாலும் தயார் என்றும் அவர்கள்தான் பிசியாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும் தனக்கு பாம்பு, பல்லி என்றால் அதிக பயம் என்றும் உலகின் மிகப்பெரிய இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் கூப்பிட்டால்கூட பாம்பு படத்தில் நடிக்க மாட்டேன்' என்றும் அவர் கூறினார்.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
சூர்யா
,
சூர்யா குறித்து ஸ்ருதிஹாசன்
,
விஜய்