அஜித், ‘ஆரம்பம்’ படத்தில் சண்டை காட்சியில் நடித்த போது அவரது காலில் அடிபட்டது. அதை ஆபரேஷன் செய்து சரி செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினார்கள். என்றாலும் அடுத்தடுத்து படங்களில் நடித்ததால் ஆபரேஷன் செய்து கொள்ளாமலேயே நடித்து வந்தார்.
இந்த நிலையில் ‘வேதாளம்’ படப்பிடிப்பின் போது, அஜித்துக்கு கால் வலி அதிகமாகவே, ‘வேதாளம்’ படம் முடிந்தபிறகு கால் வலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சைக்கு பின் டாக்டரின் அறிவுரையின்படி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி ஓய்வு எடுத்து வருகிறார். டாக்டர்கள் அவரை 8 வார காலம் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அஜித் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, விஜய் அவரை நேரில் சென்று சந்தித்ததாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரங்களிலும் இணையதளங்களிலும் பரவி வருகிறது. மருத்துவமனை டாக்டருடன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து அஜித் தரப்பில் விசாரிக்கும்போது, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு மருத்துவமனை திறந்தபோது அஜித், விஜய் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, விஜய் அந்த மருத்துவமனையை பார்க்க காலையிலும், அஜித் மாலையும் சென்றிருக்கின்றனர்.
அப்போது, அந்த டாக்டர் தனித்தனியாக இருவருடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்கள்தான் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இதை வைத்து அஜித்தை தற்போது விஜய் சந்தித்துள்ளதாக தவறான தகவல்கள் பரவியுள்ளது. அஜித்தை தற்போது விஜய் சந்தித்தார் என்ற செய்தி முற்றிலும் தவறு என்று கூறினர்.
அஜித் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது நலமாக இருப்பதாகவும், 8 வார காலம் தொடர்ந்து சென்னையில் தனது வீட்டிலேயே ஓய்வு எடுக்கப்போவதாகவும், அதன்பின்னர், லண்டன் செல்லவிருப்பதாகவும் அஜித் தரப்பில் கூறினர். இதன்பிறகே, அஜித் தனது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
அஜித்
,
சினிமா
,
மருத்துவமனையில் அஜித்தை சந்தித்தாரா விஜய்..?
,
விஜய்
,
வேதாளம்