அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில், கோவாவில் பிரம்மாண்டமான பஸ் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார்.
சென்னையில் கடும் மழை பெய்த போது, விஜய் பங்குபெற்ற ஒரு பிரம்மாண்ட சண்டைக்காட்சியை மழையில் படமாக்கினார்கள். டிசம்பர் முதல் வாரத்தில், இப்படக்குழு கோவாவுக்கு செல்லவிருக்கிறது.
அங்கு விஜய் - ஏமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து ஒரு பிரம்மாண்டமான பஸ் சண்டைக் காட்சியையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இக்காட்சியை திலீப் சுப்புராயன் படமாக்க இருக்கிறார்.
சென்னையில் விஜய் - சமந்தா காட்சிகள் நடைபெறுவது போலவும், கோவாவில் விஜய் - ஏமி ஜாக்சன் காட்சிகள் நடைபெறுவது போலவும் திரைக்கதை அமைத்திருக்கிறார் அட்லீ. இப்படத்தை அடுத்த வருட ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
Tags:
சினிமா
,
பிரம்மாண்டமான பஸ் சண்டைக் காட்சி
,
விஜய்
,
விஜய் - அட்லீ பட அப்டேட்