தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இளம் நடிகர்களில் விஜய், அஜித்திற்கு தான் அதிக ரசிகர்கள். ஆனால், இதுவே இவர்கள் படத்திற்கு வில்லங்கமாக அமைந்து வருகின்றது.
ஒரு நடிகரின் படம் வந்தால் மற்ற நடிகர் ரசிகர்கள் கிண்டல் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் வேதாளம் படத்தில் இடம்பெற்ற ‘தெறிக்க விடலாமா’ என்ற வசனத்தை விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்தது நாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது விஜய் படத்திற்கே தெறி என்று தலைப்பு வைத்துள்ளது, அஜித் ரசிகர்களுக்கு ஏதுவாக அமைய ‘இது தல சொன்னதுப்பா’ என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.உடனே விஜய் ரசிகர்கள் கத்தி போஸ்ட்ரை காட்டி, அதிலேயே தெறி என்ற வார்த்தை இருந்ததாகவும், அனிருத் ஒரு பேட்டியில் விஜய் என்றால் தெறி என்று கூறியதாகவும் எடுத்துக்காட்டினர்.
சும்மா இருப்பார்களா தல ரசிகர்கள் மங்காத்தா ட்ரைலர் பார்த்தவுடன் தனுஷ், தல சும்மா தெறிக்கவிடப்போறாரு என குறிப்பிட்டு இருந்தார்.
நடுநிலை ரசிகர்கள்...புறநானுறில் ‘தெறி’ என்ற வார்த்தை இருப்பதாக கூறி ஆளை விடுங்கப்பா என்று சில காமெடி கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி
,
தெறி விமர்சனம்